காதலனை சந்திக்க சென்ற யுவதிக்கு நேர்ந்த கொடூரம்

அமெரிக்காவிலிருந்து மெக்சிக்கோவின் எல்லை நகரத்திலுள்ள தனது காதலனை சந்திக்க சென்ற யுவதியொருவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாசை சேர்ந்த லிஸ்பெத் புளோரஸ் (23) என்ற யுவதியே கொல்லப்பட்டார்.

ஓகஸ்ட் 9 ஆம் திகதி மெக்சிகோ எல்லை நகரமான மாடமொரோஸில் உள்ள தனது காதலனை சந்திப்பதற்காக, டெக்சாஸின் பிரவுன்ஸ்வில்லிலிருந்து பயணித்த பின்னர் அவர் காணாமல் போனார்.

யுவதியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, தாயா் மரியா ரூபியோ, மறுநாள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார்.

11ஆம் திகதி உயிரிழந்த நிலையில் புளோரஸின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் காணப்பட்ட ஒரு பாறையால் தாக்கப்பட்ட பின்னர் அவர் தலையில் ஏற்பட்ட காயங்களால் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அவரது உச்சந்தலையில் ஒரு பகுதி சிதைக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாகவும், பற்கள் அனைத்தும் பலப்பிரயோகம் செய்து பிடுங்கப்பட்டுள்ளதாகவும், மோசமான சித்திரவதையின் பின்னர் யுவதி கொல்லப்பட்டுள்ளதாகவும் சட்டஅமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது காதலனை தேடி சென்றதற்காக மகள் இப்படி கொல்லப்பட்டுள்ளார், அவரது உடல் எச்சங்களை டெக்ஸாஸிற்கு கொண்டு வர அமெரிக்க, மெக்சிக்கோ அதிகாரிகள் உதவ வேண்டுமென தாயார் கோரியுள்ளார்.

ஆசிரியர்