செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து | 16 பேர் மாயம்

இந்தியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து | 16 பேர் மாயம்

0 minutes read

இந்தியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 16 பேர் மாயமாகியுள்ளனர்.

இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹன்பட் மாவட்டம் நிர்ஷா பகுதியில் இருந்து ஜம்தாரா மாவட்டம் நோக்கி டாம்டொடர் ஆற்றில் இன்று படகு சென்றுள்ளது. இந்நிலையில், அந்த படகில் 18 பேர் பயணித்துள்ளனர்.

படகு பார்பிண்டியா பாலம் அருகே சென்றபோது திடீரென கனமழை பெய்ததுடன், பலத்த காற்றும் வீசியுள்ளது. படகு ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், பயணிகள் அனைவரும் ஆற்றுக்குள் மூழ்கியுள்ளனர். சிலர் படகின் உடைந்த பாகங்களை பிடித்துக்கொண்டு நதியில் தத்தளித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அதில், 2 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

ஆனால், படகு விபத்தில் 16 பேர் மாயமாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் நதியில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.