
தமிழின தாயவர் சிந்திய கண்ணீரும்
மண்ணில் மடிந்த மாவீர
தியாகிகளின் கனவுகளும்
நனவாகாமல் போய்விடுமா
கண்ணீர் சாபங்கள் தொலைந்திடுமா
கனவோடு சென்ற ஆத்மாகளும்
அழிந்திடுமா
தென் முனையால் படும் பாடு
வடமுனையான் நெஞ்சில் அழிந்திடுமோ
அக்கால அனுபவம்
தமிழன் என்ற பெயரில்
பிறந்தது தப்பா
கொலைவாள் முனையில்
கொன்றோழித்தான்
கொடியவன் காலடியில்
பிணமாய் கிடந்தோம்
ஒட்டிய வயிறுடன் ஒருவேளை
உணவுக்காய் கையேந்தினோம்
நண்பா இப்போது உன்குறை
புரிகிறது
பழக்கமாகிய எம்சொந்தங்களின்
அடிமையாட்சி
இப்போது புரியும் உம்மவர்
ஆட்சி
வலிகளும் உணரா கூட்டத்தின் தலைவன்
உமக்காய் நின்றான்- அவன்
வேண்டாம் என்கிறோம் புரியாத
பிள்ளைகள் நீங்கள்
இப்போது பரிதவிக்கிறீர்
பழகிய கண்களுக்கு பார்ப்பது
எம் படமாய் ஓடுகிறது
ஒதுக்கிவைக்கப்பட்ட நாங்கள்
குழந்தையாய் குமுறினும்
உதவ நாதியில்லை
கயவன் உம் கண்களை கட்டினான்
கட்டிய கண்களுடன் கழுத்தை
நெரிக்கின்றான்
வாடிய நெஞ்சமும் புழுவாய் துடித்தது
செந்நெருப்பில் உயிருடன் எரித்தான்
கண்டதுண்டா உம்கண்கள்…
கொதித்த தார்பாயில் குழந்தையை
போட்டு விளையாடினான்
அயலோனுடன்
பிஞ்சு நெஞ்சில் துப்பாக்கிமுனை
வைத்து வெடித்தளித்தான் கொடூரன்
இன்று எமக்கிட்ட நாமம்
பயங்கரவாதி
வலிகள் நிறைந்த உள்ளங்களை
கேட்டுப்பார் அழிந்திடா ரணங்களை பூட்டிவைத்துள்ளார்
புதைந்த ஓர் இன சாம்ராஜ்யத்தின்
புகழ் கூறும்
வரலாறு கண்டிராத ஒப்பற்ற மாவீரன்
இன்று இழந்து தவிக்கின்றோம்
நண்பா இப்பொழுது அவன் பெருமை
பறைசாற்றும் ஒலிகளுக்கு
எம்மினம் தலை வணங்குகிறது
காலம் கூட கண்டிராத கரிகாலன் படை
எவரறிவார் ஒடுக்கப்பட்ட இனத்தின்
விடிவெள்ளி- அவன்
தனெக்கென வாழாது
இனத்திற்காக வாழ்ந்த பொன்மறவன்
இன்று ஓங்கிய கைகள் அன்று
ஓங்கி இருந்தால் வலிகளில்லா வாழ்கை மலர்ந்திருக்கும்
நீங்கள் படும் வேதனை கண்டு
மகிழ நாம் கல்நெஞ்சவரல்லர்
உமக்காய் குரல் கொடுக்க
நாம் இருப்போம்.
கேசுதன்