செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் முப்பால் தாண்டிய மிருகம் | செ.சுதர்சன்

முப்பால் தாண்டிய மிருகம் | செ.சுதர்சன்

1 minutes read

வெட்கம் கெட்டவள் என்றோ
வெட்கம் கெட்டவன் என்றோ
வெட்கம் கெட்டது என்றோ
உன்னைச் சொல்ல
என்னிடம்
சொற்கள் ஏதும் இல்லை!

நீயோ முப்பாலையும்
தாண்டிய மிருகம்!
உனக்கே அது தெரியும்
என்பதால்
என்னையேன் கோபிக்கிறாய்?

நீயோ
ஒரு பெண்ணாக இருக்கிறாய்
என்கிறாய்…
நசிக்கிறாய்!
அதே வேளை
ஆணாகவும் இருக்கிறாய் என்கிறாய்..
திமிர்க்கிறாய்!
மறுகணமே ஏதோவாக மாறுகிறாய்
மறைந்து கொள்கிறாய்….
நசிக்கிறாய்!

அதைப் பற்றிப் பிரச்சினை இல்லை!
உன்
சுய அரசியல் லாபங்களில்
உன் பாலை
தந்திரமாக மாற்றி
அகத்துள் சிரிக்கிறாய்…!
முட்டாளே!

ஆனாலோ…?
அவற்றைத் தாண்டிய
உன் அடையாளங்களைத்
தந்திரங்களால்
நீயே மறைப்பதை
நீதானூம்
அறிவாயா?

வீதியோரப் பிச்சைக்காரரின்
குமட்டலாய்….
நாற்றம் எகிறும் ஒருவரின் குமட்டல்
உனது வாழ்வை எழுதும்போது,
அது உனது வரலாற்றுக் குமட்டலை
ஒரு துளியும் இல்லாமல்,
துப்பிச் செல்ல,
நீயோ புத்தாடையோடு
புது மொழி பேசுகிறாய்…!

உனது மக்கள்
உன்னை
லூசி என்றோ
லூசன் என்றோ
லூசு என்றோ
பழித்துத் துப்புகிறார்கள்…

நீ எதுவோ அறியேன்
நீ அறிவாய்!

நீ முட்டாள் இல்லை,
அறிவாளி என்றே சுமக்கும்
புத்தி நரி மூளை!
என்பதை
நான் மட்டுமே அறிவேன்!

வெளிவந்தும் வெளிவரமலும்
துர்நாற்றம் எறிகின்றன
என் இனத்தின் மீதான
உனது வார்த்தைகள்!

இன்னும்…
உனது முதுகின் புறம்
நீயே முன்னர் எறிந்த நாற்றம்
படையாய்ப் படர்கிறது!
துடைத்துக் கொள்!
அது நீயே எறிந்த நாற்றம்!

ஒன்றை அறிவாயா?

வரலாற்று வெளியில்…
நீ எரித்த விடுதலை வயல்களை,
நீ எரித்த அறிவு முளைளை,
நீ எரித்த உனது ஆற்றல்களை!
நீயே அழித்தாய் என்பதை?

ஒரு யானை
மதம் பிடித்ததாயின்
‘மன்னர் அதனைக் கொன்றார்’
என்பர் மக்கள்.

நீ
மதம் பிடித்ததாயின்…
அதை
மதத் தலைவர்களே
கொன்றனர் அன்றோ!

என்பதே நீதி!

புத்தம் சரணம்

செ.சுதர்சன் 23/07/2022

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.