செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ஓய்வூதிய கொள்கைக்கு எதிராக பிரான்ஸில் போராட்டம்

ஓய்வூதிய கொள்கைக்கு எதிராக பிரான்ஸில் போராட்டம்

0 minutes read

பிரான்ஸில், அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 64ஆக உயர்த்தும் சட்டமசோதாவை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

முன்னதாக, ஓய்வு பெறும் வயது 62ஆகும்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தால் பிரான்சில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்த நிலையில், தலைநகர் பாரீஸில் நடைபெற்ற 7ஆவது நாள் போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர், இளைஞர்கள், ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, முகமூடி அணிந்து பட்டாசுகளை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொலிஸார் விரட்டியடிக்க முயன்றனர்.

அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி : பிரான்ஸில் ஓய்வுபெறும் வயதெல்லை உயர்கிறது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.