தமிழ் திரையுலகில் இசை மற்றும் நடிப்பு என இரு துறைகளிலும் தனித்துவமாக தடம் பதித்து வரும் தேசிய விருது பெற்ற கலைஞரான ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூரில் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் முருகு இயக்கத்தில் உருவாகும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி, கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். செல்லப்பிராணியான நாயுடன் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.எஸ். சினிஷ் மற்றும் எஸ். சாய் தேவானந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது. தொடர்ந்து இருபது நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.