செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வருண் தேஜ் ,லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்தம்

வருண் தேஜ் ,லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்தம்

0 minutes read

பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகியுள்ள நிலையில் நிச்சயதார்த்த புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

பிரம்மன், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி என்பதும் இவர் தெலுங்கு நடிகர் வருண் தேஜ் என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தங்களது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நிலையில் தற்போது இருவரும் விரைவில் தம்பதிகளாக இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ’மிஸ்டர்’ என்ற திரைப்படத்தில் இருவரும் முதல் முதலாக இணைந்து நடித்த போது ஏற்பட்ட கெமிஸ்ட்ரி இப்போதும் இருவருக்கும் உள்ளது என்று இந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.