செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இராணுவ பயிற்சியின் போது விபரீதம்; மூவர் சுட்டுக்கொலை!

இராணுவ பயிற்சியின் போது விபரீதம்; மூவர் சுட்டுக்கொலை!

1 minutes read

மத்திய ஜப்பானின் கிபு மாகாணத்தில் இராணுவத்தின் தரைப்படை பிரிவில் புதிதாக சேர்ந்த இராணுவ வீரர்கள் 120 பேர் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன்போது கடந்த ஏப்ரல் மாதம் இராணுவத்தில் சேர்ந்த 18 வயது வீரர் ஒருவருக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிப்பதற்காக இராணுவ அதிகாரிகள் மூவர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி, கடந்த சில நாட்களாக அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அதில் ஒரு இராணுவ அதிகாரியுடன் 18 வயது வீரருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல் பயிற்சி நடந்தது. அப்போது அந்த இராணுவ அதிகாரியை நோக்கி திடீரென அந்த வீரர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அதிகாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதனை தடுக்க முயன்ற 2 வீரர்களும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்களும் உயிரிழந்தனர்.

அந்த பயிற்சி இராணுவ வீரரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஜப்பானின் இராணுவ தளபதி யசுனோரி மொரிஷிதா கூறுகையில், “ஆயுதங்களை கையாளும் அமைப்பு இது போன்ற ஒரு சம்பவத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இந்தச் சம்பவத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிமருந்து சம்பந்தப்பட்ட பயிற்சிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அவர் ஜப்பானின் இராணுவ தளபதி உத்தரவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.