ட்விட்டருக்கு போட்டியாக திரெட்ஸ். மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் ட்விட்டருக்கு போட்டியாக ‘திரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.
இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்தவண்ணம் உள்ளனர். தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் ட்விட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது.
திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.