செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்க்குமாறு இங்கிலாந்து பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

இஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்க்குமாறு இங்கிலாந்து பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

1 minutes read

ஈரானின் இராணுவ தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கான அனைத்துப் பயணங்களையும் தவிர்க்குமாறு, இங்கிலாந்து பிரஜைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதிகள், நகரப் பகுதிகள் மற்றும் அரச பகுதிகள் என பல இடங்களில் கடந்த சில நாட்களாக ஈரான் மற்றும் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இதனையடுத்து விமான வழிப் பாதையை பயன்படுத்துவதை இஸ்ரேல் முற்றாக நிறுத்தியுள்ளது.

“குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தும் வேகமான சூழ்நிலை” என இது குறித்து தெரிவித்துள்ள இஸ்ரேல், “நிலைமை விரைவாகவும் எச்சரிக்கையுமின்றியும் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது” என்றும் எச்சரித்துள்ளது.

எனவே, “இஸ்ரேலின் சில பகுதிகளுக்கான அனைத்துப் பயணங்களையும்” தவிர்க்குமாறு இங்கிலாந்து அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஜூன் 13 அன்று அவசரகால நிலை அறிவிக்கப்பட்ட பின்னர் “இஸ்ரேலின் அத்தியாவசியமான பயணங்களைத் தவிர வேறு அனைத்தையும்” தவிர்க்குமாறு இது புதுப்பிக்கப்பட்டது.

வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி X இல் பதிவிட்டதாவது: “இங்கிலாந்து நாட்டினருக்கான எனது செய்தி தெளிவாக உள்ளது – உங்கள் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமையாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.