செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாடாளவிய ரீதியில் குற்றம், போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையில் 607 பேர் கைது

நாடாளவிய ரீதியில் குற்றம், போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையில் 607 பேர் கைது

1 minutes read

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நாடாளவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய நாடாளவிய ரீதியில்  சனிக்கிழமை (23)  வரையில் பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 27,838 ஆகவும்  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 607 ஆகவும் குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய இனங்காணப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 09ஆகவும்  கைது செய்யப்பட்டுள்ள திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை  14ஆகவும் காணப்படுகின்றன.

மேலும் கைது செய்யப்படுவதற்கான கட்டளை பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை  268ஆகவும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் 44ஆகவும் அலட்சியமாக வாகனம் செலுத்தியமைக்காகக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 102ஆகவும் பதிவு செய்யப்பட்ட  போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 4,709ஆகவும் காணப்படுகின்றன.

இந்நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குதல் போதைப் பொருள் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக கோட்ட மட்டத்திலான இந்த விசேட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.