செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை கட்டுப்பாட்டை இழந்தது தியேன்குங்1, எந்த நிமிடத்திலும் பூமியோடு மோதலாம்?கட்டுப்பாட்டை இழந்தது தியேன்குங்1, எந்த நிமிடத்திலும் பூமியோடு மோதலாம்?

கட்டுப்பாட்டை இழந்தது தியேன்குங்1, எந்த நிமிடத்திலும் பூமியோடு மோதலாம்?கட்டுப்பாட்டை இழந்தது தியேன்குங்1, எந்த நிமிடத்திலும் பூமியோடு மோதலாம்?

1 minutes read

தியேன்குங்1 (Tiangong-1) என்பது சீனக் குடியரசின் முதலாவது விண்வெளி ஆய்வுகூடமாகும். லாங் மார்ச் 2எப்/ஜி என்ற ஏவுகலன் மூலம் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி ஏவப்பட்ட இதன் நோக்கம் ஒரு நிரந்தரமான ஆட்களுடன் கூடிய விண்வெளி நிலையம் ஒன்றை 2020 ஆம் ஆண்டுக்குள் அமைப்பது தான்..!  சீனாவின் அந்த கனவு நோக்கம் வீணாய் போனது மட்டுமின்றி தற்போது கைமீறி போய்விட்டது. சீனாவின் தியேன்குங்1 விண்வெளி நிலையத்தின் நிரந்தரத்தன்மை இப்போது கேள்விக்குறியாகி விட்டது.

அதாவது உண்மையில் தியேன்குங்1 விண்வெளி நிலையமானது பூமியை நோக்கி வீசியெறியப்படும் ஒரு விண்கல் போல செயல்பட இருக்கிறது. ஆளில்லாத எட்டு டன் எடை கொண்ட இந்த விண்வெளி நிலையம் எந்த நேரத்தில் எங்கே விழுந்து நொறுங்கும் என்ற எந்தவிதமான அதிகார்ப்பூர்வமான தகவலையும் சீன அதிகாரிகள் வழங்கவில்லை. ஆகமொத்தம் ஒரு ஆபத்தான மற்றும் கட்டுப்பாடற்ற வீழ்ச்சியில் தான் இது முடிவடையும் என்பது நாளுக்கு நாள் உறுதியாகிக்கொண்டே போகின்றது. இந்த விண்வெளி நிலையம் பெருங்கடலில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விபத்தில் இறங்கும்படியாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், ஆஸ்திரேலியாவில் பேசிய ஒரு வானவியலாளரின் கூற்றுப்படி அது எந்த நேரத்தில் செயலிழக்க முடியும் என்ற பீதி கிளம்பியுள்ளது. அதாவது பூமியின் வளிமண்டலத்திற்குள் ன் மறு நுழைவானது உமிழும்படியாக, உருகிய உலோகமாகி ஒரு கட்டுப்பாடற்ற விபத்துக்குளாகும் தரையிறக்கம் நிகழுமாம்.

இதற்கிடையே ஆரம்பகால செயற்கைக்கோள் ஆய்வாளரான தாமஸ் டோர்மன் தொலைநோக்கிகள் மற்றும் கேமராக்கள் பயன்படுத்தி கட்டுப்பாடை இழந்த செயற்கைக்கோளை பின்தொடர்ந்து சாதனத்திலுள்ள சிக்கலை கண்டதாக கூறியுள்ளார். தன் கணிப்பு சரியென்றால் “சீனா அவர்களின் விண்வெளி நிலையத்தில் ஒரு பிரச்சினை உள்ளது என்பதை உலகிற்கு தெரியப்படுத்த கடைசி நிமிடம் வரை காத்திருக்கும்” என்று தாமஸ் டோர்மன் கூறியுள்ளார்.

விண்வெளி நிலையத்தின் துண்டுகள் மக்கள் தொகை மிகுந்த பகுதிகளில் விழுந்தால் நிச்சயமாக அதுவொரு கெட்ட நாலாகத்தான் இருக்க முடியும் என்றும் ஆனால் முரண்பாடுகள் அது கடலில் அல்லது மக்கள் வசிக்காத வேறொரு இடத்தில் தரையிறங்கும் என்று தெரிவிக்கின்றன. அனைத்தைக்காட்டிலும் இதைப்பற்றி எந்த விதமான அதிகாரப்பூர்வமான தகவலையும் சீனா வழங்கவில்லை என்பது தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. தியேன்குங்1 கட்டிபாடின் கீழ் பூமி வட்ட பாதைக்குள் நுழையும் என்பது போல தெரியவில்லை என்று ஆசிய ஆய்வுகள் மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் டீன் செங் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

நன்றி : தினக்குரல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.