ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் இராணுவம் மற்றும் பொலிஸாரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு படையினர் தரப்பில் தக்க பதிலடி கொடுத்து பயங்கரவாதிகள் ஒடுக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள தகாப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அருகே இன்று திடீரென வெடிகுண்டு வெடித்தது.
முகாமில் இருந்த சற்று தொலைவில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இன்று அதிகாலையில் லாஞ்சர் மூலம் வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் ஒரு வெடிகுண்டு இராணுவ முகாம் வேலி அருகே விழுந்து வெடித்துள்ளது.
இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் வெடிகுண்டு வெடித்ததையடுத்து அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.
இராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
