செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா முகாமில் இருந்து படகுமூலம் இலங்கை வந்த அகதிகள் கைது!

முகாமில் இருந்து படகுமூலம் இலங்கை வந்த அகதிகள் கைது!

0 minutes read

 

இந்தியா தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

அவர்களில் வாடகைக்கு படகோட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவார்.

திருகோணமலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகள் மற்றும் மலேரியா தடுப்பு பரிசோதனையின் பின்னர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பொலிஸாரின் விசாரணையின் பின்னர் 10 பேரும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.