செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா புலிகள் விவகாரம் சீமான் மீது வைகோ காட்டம்

புலிகள் விவகாரம் சீமான் மீது வைகோ காட்டம்

0 minutes read

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்தத்தில் தாமும் பங்கெடுத்திருந்ததாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுசெயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்ற தமிழ் தேசியவாத தமிழர்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழர்களை அரசியல் முன்னெடுப்புக்காக பயன்படுத்திக் கொள்கின்றமை குறித்து, இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் வை.கோ இதனைக் கூறியுள்ளார்.

5 நிமிடம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரகாரனுடன் இருந்தவர்கள் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தையே வழிநடத்தியவர்கள் போல கருத்து வெளியிடுகின்றனர். ஆனால் தாம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளால் சிறைவாசம் அனுபவித்ததுடன், அந்த இயக்கத்துடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் வை.கோ குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.