ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற பொதுமக்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து முன்னேறினர்.
அப்போது தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்ததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். ஆகையால் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு தீவைக்கப்ட்டது.
தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க பொலிஸார் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. முதல் முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 2-வது மற்றும் 3-வது முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் மேலும் எத்தனை பேர் உயிரிழந்தனர், எத்தனை பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
இந்தியாவின் தூத்துக்குடியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்னிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற துப்பாக்கிச் சூடு நடந்தது இல்லை, ஒரே நாளில் 8 பேர் பொலிஸார் சுட்டுக் கொன்றதால் தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கல்வீச்சில் 20 போலீஸ் உள்பட 65 பேர் காயமடைந்துள்ளனர்.
