ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62வது படத்தினை நடித்து வருகிறார் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது முறையாகவும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தை அடுத்து நடிகர் விஜய் யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்த ஓர் விஷயம்.
இந்நிலையில், விஜய்யின் 63 வது படத்தை அமீர் இயக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமீரின் கனவுப் படமான ‘கண்ணபிரான்’ படத்தில் விஜய் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
