அம்மன் தாயி’ என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்’ புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை டைரக்டும் செய்கிறார்கள்,
விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, டெரிக்-கார்த்திக்-ராஜ் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஆந்திர மாநிலம் பைரவக்கோனா என்ற இடத்தில், சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளோம். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.”
