தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் நடித்துவரும் புதிய படத்தில் இவ்விருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். போயபட்டி சீனி இப்படத்தை இயக்கிவருகிறார். படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் சல்மான் கானின் பயிற்சியாளரை அழைத்துவந்து சிக்ஸ்பேக் கெட்டப்புக்கு மாறிக் கொண்டிருக்கிறார் ராம்சரண்.
இந்தப் படத்தில் ராம்சரணுடன் கியாரா அத்வானி, விவேக் ஓபராய், பிரசாந்த், சினேகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் பிரசாந்த், சினேகா நான்காவது முறையாக இணைந்து இருக்கின்றனர்.
நடிகை சினேகா தமிழில் அறிமுகமான திரைப்படம் ‘விரும்புகிறேன்’. இதில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு பொன்னர் சங்கர் மற்றும் ஆயுதம் போன்ற படங்களில் பிரசாந்துடன் இணைந்து நடித்திருந்தார் சினேகா.
