செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்திய விபத்தில் 17 பேர் பலி!

இந்திய விபத்தில் 17 பேர் பலி!

0 minutes read

 

 

அதிவேகமாக சென்ற பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் போடப்பட்ட மதகில் மோதி விபத்துக்கு உள்ளானது. உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று 13.06.2018 காலை தனியார் பேருந்து ஒன்று பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்தது.

பேருந்திற்குள் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் மோதியதில் பலருக்கு கை கால்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது.

இதனால் இரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள், தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அயலில் உள்ள மக்கள் மற்றும் பொலிஸார் வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.