பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்பளித்தது.
குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
விடுதலைப்புலிகளின் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கலிருந்து விடுவிக்கபட்டதுடன் அர்களுகு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பணிப்பு வழங்கியது.
மேலும், வங்கிக்கடன் பெறுவதில் நடைபெற்ற மோசடிக்கு குலமன்னை, அப்துல்லா மற்றும் மாம்பழம் என மூவருக்கும் ஒத்திவைக்கப்பட்ட தடுப்பு தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யோகேஸ், கவிதாஸ், குமார் மற்றும் சிவலோகநாதன் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு இழப்பீடுகளும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
