கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று இரவு ஒருவர் கைது செய்யப்பட்டதுடன்
இன்று ஒருவர் காலை கிளிநொச்சி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார் சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை இருவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குறித்த சந்தேக நபர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது பதில் நீதவான் கிரேஸியன் அவர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்
மேலும் சிறுத்தையை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களையும் விரைவில் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை கொலை செய்த துன்புறுத்திய சம்பவம் வலைத்தளங்களிலும் காணொளியாகவும் புகைப்படங்களாகவும் வெளியானதையடுத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்.
