சவுதி அரேபியாவிடம் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தனது ட்விட்டரில் சவுதி அரேபியா மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஈராணுடனான உடன்படிக்கைகளில் இருந்து அமெரிக்கா விலகியதை தொடர்ந்து, ஈரான் மீதான தடைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றது.
இதன் ஒரு அங்கமாக எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், அண்மைக்காலமாக மசகு எண்ணெய்யின் விலையில் குறிப்பிடத்தக்களவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு மசகு எண்ணெய்யின் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சவுதி அரேபியா தனது அன்றாட மசகு எண்ணெய் உற்பத்தியை 20 லட்சம் பீப்பாய்களாக அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.
