பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் களுபோவில மற்றும் பத்தரமுல்ல பகுதியில் வைத்து ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 1,248 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் களுபோவில, பிரதிபிம்பாராம் வீதியில் ஜீப் வண்டி ஒன்றை சோதனையிட்ட போது அதிலிருந்து 30 ஹெரோயின் பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
சந்தேகநபர்களை விசாரணை செய்த போது பத்தரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேலும் 66 ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த பொதிகளில் இருந்து 103 கிலோ 950 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
