முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக்கும் திட்டம் தொடர்பில் தமது தரப்பு கவனம் செலுத்தி வருவதாக ஜனநாயக இடதுசாரிக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் பிரதான செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமாயின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஒன்றிணைந்த எதிர்கட்சியினரும், மஹிந்த ராஜபக்ஷவும் இதுவரை தீர்மானிக்கவில்லை.
எவ்வாறிருப்பினும், நாடாளுமன்றத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் எண்ணமே தமக்கு உள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
