செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் 06 கோடி பெறுமதியில் ஹெரோய்ன்!

இலங்கையில் 06 கோடி பெறுமதியில் ஹெரோய்ன்!

0 minutes read

 

திருகோணமலை சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சம்பூர், இலக்கந்தை கடற்பிரதேசத்தில் பல இடங்களில் நிலைத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஹெரோய்ன் போதைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுமார் 05 கிலோவும் 550 கிராம் நிறையுடைய 21 ஹெரோய்ன் பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி சுமார் 66 மில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டிலிருந்து கொண்டுவந்து விநியோகத்திற்காக இவற்றை புதைத்து வைத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.