செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா சூப்பர் சோனிக் விமானம் மக்கள் பாவனைக்கு மீள் வடிவம்!

சூப்பர் சோனிக் விமானம் மக்கள் பாவனைக்கு மீள் வடிவம்!

1 minutes read

 

ஒலியை விட வேகம் கூடிய சுப்பர் சொனிக் விமானங்களை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில் முன்னணி, விமான தயாரிப்பு நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுப்பர் சொனிக் விமான சேவையின் மூலம் பயண நேரம் அரைவாசியாக குறைக்கப்படும், பயணிகள் மத்தியில் அதில் பயணிக்க பெரும் ஆர்வத்தை காட்டிவருவார்கள்

இருப்பினும், 2000ஆம் ஆண்டு கொன்கோட் வாநூர்தி ஒன்று விபத்திற்கு உள்ளானதில் அதில் பயணித்த 109 பேரும் பலியாகினர்.

அதேபோன்று அமெரிக்க இரட்டை கோபூர தாக்குதல் என்பனவற்றை அடுத்து கொன்கோட் சேவை முற்றாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சூப்பர் சோனிக் விமான சேவை நிறுத்தப்பட்டு 15 ஆண்டுகள் கழிந்த நிலையில், மீண்டும் அந்த ரக வாநூர்திகளை உற்பத்தி செய்ய நான்கு பிரபல நிறுவனங்கள் தற்போது முன்வந்துள்ளன.

சில மணி நேரத்தில் உலகின் எந்த ஒரு இடத்திற்கும் செல்லும் ஆற்றல் கொண்ட இந்த ரக வாநூர்திகள் அடுத்த சில வருடங்களில் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.