செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மருதமுனை மு.கா, ம.கா, ஆதரவு இளைஞர்கள் தேசிய காங்கிரஸில் இணைவு !!

மருதமுனை மு.கா, ம.கா, ஆதரவு இளைஞர்கள் தேசிய காங்கிரஸில் இணைவு !!

1 minutes read
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் தேசிய காங்கிரஸின் கொள்கைகளை ஏற்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் எ.எல்.எம். அதாஉல்லா முன்னிலையில் இன்று இணைந்து கொண்டனர்.
இன்று (18) மாலை 4.00 மணியளவில் தேசிய காங்கிரஸின் சட்டவிவகார கொள்கை அமுலாக்கள் செயலாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி எ.எல்.எம். ரிபாஸ் தலைமையில் மருதமுனையில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்கள் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு இணைந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் தேசிய காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்பு இணைப்பாளர் யூ. எல்.என். ஹுதா, மருதமுனை இளைஞர் அமைப்பாளர் சமட் ஹமீட், உயர் பீட உறுப்பினர் நூருல் பௌஸ், உட்பட இளைஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.