தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகரான ரிஷிகாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மொத ராத்திரி’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டாய் டக்கா..’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில் குமார், பானுப்பிரியா, சங்கீதா கிரிஷ், பக்ஸ் பகவதி பெருமாள், சேத்தன், அப்துல் லீ , ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார்.
ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி- வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஊரான ஊரே கூடி ஒண்ணா நிக்கும் கல்யாணம் வாங்கய்யா வாழ்த்த எல்லாரும்..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத , பின்னணி பாடகர் பரத் சங்கர் பாடியிருக்கிறார். இந்து சமய திருமண வைபவத்தை கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுப் பின்னணியில் கொண்டாடப்படும் கொண்டாட்டத்தின் பின்னணியில் பாடல் இடம் பிடித்திருப்பதாலும்… அவை பாரம்பரிய இசை வடிவத்தில் அமைந்திருப்பதாலும்.. பாரிய அளவிலான ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.