மும்பை தாதா ஒருவரின் வாழ்க்கை பின்னணியை தழுவி எடுக்கப்பட்டு வரும் சூர்யா – லிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் சமந்தா வித்யூத் ஜம்வால் மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் பாலிவூட்டில் முன்னணி குத்தாட்ட நடிகை மர்யம் ஜாக்காரியா சூர்யாவுடன் ஒரு குத்தாட்டத்திற்கு ஆடிய பாடல் காட்சி மும்பையில் படமாக்கப்பட்டது. தற்போது இந்த படத்தில் இணையும் அடுத்த பாலிவுட் பிரபலம் சோனாஷி சின்ஹா. இவரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதோடு சூர்யாவோடு ஒரு டூயட் பாடலையும் பாட இருக்கிறார். இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் லிங்குசாமி வெளியிடும் ஐடியாவில் மும்பை பிரபலங்களையும் இதில் சேர்த்து நடிக்க வைத்து வருவதாக கூறப்படுகிறது.
சோனாஷி சின்ஹா தான் படத்தின் திருப்புமுனைக்கு காரணமாக வரும் கேரக்டராம். அவரது கேரக்டரை இன்னும் கொஞ்சம் டெவலப் செய்து அதிக முக்கியத்துவம் தர சூர்யாவும் லிங்குசாமியிடம் பரிந்துரை செய்துள்ளாராம். இதனால் சமந்தா தன்னுடைய கேரக்டர் டம்மியாகிவிடுமோ என அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். ஆனால் லிங்குசாமி, நீதான் இந்த படத்தின் ஹீரோயின் உனக்கு எந்த விதத்திலும் முக்கியத்துவம் குறையாது என உறுதியளித்துள்ளாராம்.