பெரிய படம் இப்போதைக்கு இல்லை-ஸ்ருதிபெரிய படம் இப்போதைக்கு இல்லை-ஸ்ருதி

பெரிய படத்திலிருந்து விலகிவிட்டதாக ஸ்ருதி கூறி உள்ளார்.தமிழில் விஷால் ஜோடியாக ‘பூஜை படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். தவிர தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குனர் வசந்தபாலன் டைரக்டு செய்கிறார். அதில் ஸ்ருதி ஹாசன் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதுகுறித்து கடந்த வாரம் தனது இணையதள பக்கத்தில் ‘விஜய், சிம்புதேவன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன் என ஸ்ருதி குறிப்பிட்டிருந்தார். ஆனால், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ள மற்றொரு தகவலில்,‘மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. பெரிய படம் இப்போதைக்கு இல்லை. எல்லாம் ஒரு காரண காரியத்துக்காக நடக்கிறது. நீங்கள் அதனை கண்டறியுங்கள் என்று பொடி வைத்திருக்கிறார். இந்தியில் ‘வெல்கம் பேக் படத்தில் ஜான் ஆப்ரகாம், அனில் கபூருடனும் மற்றும் ‘ரமணா ரீமேக் ஆன ‘கபார் படத்திலும் நடித்து வருகிறார் ஸ்ருதி. இந்த 2 படங்களும் 80 சதவீதம் முடிந்திருக்கிறது. இந்நிலையில் அவர் பெரிய படத்திலிருந்து விலகி இருப்பதாக குறிப்பிட்டது விஜய் படம்தான் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்