செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா லண்டனை பிரதிபலிக்கும் படத்துக்கா சூர்யாவுடன் இணையும் மோகன்லால்!

லண்டனை பிரதிபலிக்கும் படத்துக்கா சூர்யாவுடன் இணையும் மோகன்லால்!

0 minutes read


செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் சூட்டிங் வேலைகள் பரபரப்பாக நடந்துக்கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் சூட்டிங்கை முடித்த கையோடு கே.வி. ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை கே.வி. ஆனந்த் தொடங்கிவிட்டார். அயன், மாற்றான் படத்திற்கு பிறகு சூர்யா – கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகவிருக்கும் புது படத்தின் கதை லண்டனில் நடப்பதுபோல் எழுதப்பட்டுள்ளது.

இதனால் லண்டனில் படமாக்கும் இடங்களை தேர்வு செய்யும் வேலையில் இயக்குனர் குழு தீவிரமாக உள்ளது. இந்த படத்தில் சூர்யாவோடு மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஸ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் வனமகன், கஜினிகாந்த் படத்தில் நடித்துள்ள சாயிஷா ஹீரோயினாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.