செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இசைக்கு உயிர் கொடுத்த குரலுக்கு அகவை 72 வாழ்த்துக்கள்.

இசைக்கு உயிர் கொடுத்த குரலுக்கு அகவை 72 வாழ்த்துக்கள்.

1 minutes read

 

1946-ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், இதுவரை 16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளமையும் அதிலிலும் உலகிலேயே அதிக பாடல்கள் பாடியவர் என்ற பெருமை கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 72-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

தெலுங்கு மொழியில் பாடல்கள் பாடி திரைத்துறையில் அறிமுகமான அவர், முதல் முறையாக தமிழில் பாடியது இயற்கை என்னும் இளைய கன்னி பாடல். ஆனால், எம்.ஜி.ஆருக்கு எஸ்.பி.பி பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் முதலில் வெளியாகி வெற்றி பெற்றது.

நான் முறைப்படி சங்கீதம் எல்லாம் கற்றதில்லை. கேள்வி ஞானத்தால் எனக்கு தெரிந்ததை பாடுகிறேன் என எஸ்.பி.பி. பல முறை சொல்லியிருக்கிறார்.

ஆனால், கர்நாடக இசைக்காகவே உருவான சங்கராபரணம் திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடியவர் எஸ்.பி.பி. இசை கற்றவர்களே சிரமப்பட்டு பாடக்கூடிய கர்நாடக இசைப் பாடல்களை சிறிதும் பிசிரில்லாமல் எஸ்.பி.பி பாடுவார் .

எஸ்.பி.பி-யின் மிகப்பெரிய பலம் அவருடைய குரல் வளம். யாருக்கும் பொருந்தக் கூடிய இனிமையான குரலைக் கொண்டிருக்கும் எஸ்.பி.பி, எம்.ஜி.ஆர் தொடங்கி, இன்றைய தலைமுறையினர் வரை 50 ஆண்டு காலமாக ஒரே குரலுடன் பாடி வருகிறார்.

16 மொழிகளில் பாடியிருந்தாலும் எந்த மொழியிலும் சிறிய தவறு கூட இல்லாமல் சுத்தமாக பாடக்கூடியவர் எஸ்.பி.பி. இவர் நாற்பதாயிரம் பாடல்கள் பாடியது எப்படி என பலரும் வியந்திருக்கிறார்கள். கன்னட மொழியில் 12 மணி நேரத்தில் 21 பாடல்களை பாடி எஸ்.பி.பி. சாதனை படைத்துள்ளார்.

தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், ஹிந்தியில் ஒரே நாளில் 16 பாடல்களையும் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. சளைக்காமல் பாடும் இந்த திறனும் அவருடைய மிகப்பெரிய பலம். பின்னணி பாடகரான எஸ்.பி.பி 45 படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். அதோடு பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். 5 தலைமுறைகளை கடந்திருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசைப்பயணம் இன்னும் தொடர வேண்டும் என வாழ்த்துவோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.