செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வசூலில் பாகுபலி 2 தாண்டியது சஞ்சு என்ற திரைப்படம்!

வசூலில் பாகுபலி 2 தாண்டியது சஞ்சு என்ற திரைப்படம்!

1 minutes read

 

நடிகர் ரன்பீர் கபூர் நடிகர் நடித்துள்ள சஞ்சய் தத்தின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவந்துள்ளது. சஞ்சு என்று பெயரிடப்பட்டுள்ள இப்ப படமானது பெரும் வசூலை கண்டுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்சா போன்றோர் நடித்துள்ளார்கள்.

இந்தியாவில் 4000 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 1300 திரையரங்குகளிலும் வெளியாகியுள்ள சஞ்சு படம் முதல் நாளன்று முதல் பல சாதனைகளைப் படைத்துள்ளது.

முதல் நாளன்று இந்தியா முழுக்க ரூ. 34.75 கோடி வசூலை கண்டு சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு இந்த வருடம் வெளியான ரேஸ் 3 படம் முதல் நாளன்று ரூ. 29.17 கோடி வசூல் செய்து சாதனை செய்தது. அந்தச் சாதனையை முறியடித்து 2018-ம் வருடம் முதல் நாளன்று அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை எட்டியது. ரன்பீர் கபூர் நடித்த படங்களில் இதற்கு முன்பு பேஷ்ராம் படம்தான் அதிகமாக முதல் நாளன்று ரூ. 22 கோடி வசூல் செய்தது. அந்தச் சாதனையையும் சஞ்சு முறியடித்தது.

இந்தியா முழுக்க ரூ. 46.71 கோடி வசூலித்து மகத்தான சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன்பு பாகுபலி 2 படத்தின் ஹிந்திப் பதிப்பு ரூ. 46.50 கோடி வசூலித்ததே இந்தியாவில் ஒருநாளின் அதிகபட்சத் திரைப்பட வசூலாக இருந்தது. அந்தச் சாதனையை சஞ்சு படம் முறியடித்துள்ளது.

அதேபோல முதல் மூன்று நாள்களில், இந்தப் படம் ரூ. 120.06 கோடி வசூலித்தும் சாதனை படைத்துள்ளது. இந்த வருடம் இதுபோல எந்தவொரு இந்தியப் படமும் முதல் மூன்று நாள்களில் இவ்வளவு வசூலைக் கண்டதில்லை. இதற்கு முன்பு ரேஸ் 3 படம், 106.47 கோடி வசூலித்தது, முதல் மூன்று நாள்களில். அந்தச் சாதனையை மிக எளிதாகத் தாண்டியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.