புகைப்படத் தொகுப்பு

Home சினிமா லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்

1 minutes read


’மாநகரம்’ மற்றும் ’கைதி’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக தளபதி விஜய் படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றார் என்பதும், விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் வெளியானால் லோகேஷ் கனகராஜ் கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் என்ன? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசன் தயாரிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள புதிய செய்திகளின்படி தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரின் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தெலுங்கு படமொன்றை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் நாயகன் தெலுங்கின் முன்னணி நடிகர் என்றும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இந்த படம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.