செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ரஜனி கமல் கூட்டணி பற்றி லோகேஷ் கனகராஜ் கருத்து

ரஜனி கமல் கூட்டணி பற்றி லோகேஷ் கனகராஜ் கருத்து

1 minutes read

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படம் தொடர்பான கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்தன. அந்தப் படத்தை ‘மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றார்கள். இது ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 50-வது படமாகும். ஆனால், அது பற்றிய அறிவிப்பு வெளியாகாமலே இருந்தது.

இதனிடையே, லோகேஷ் கனகராஜ்  இயக்கிய ‘கைதி’ ஆகஸ்ட் 12 ஆம் தேதி டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக அளித்துள்ள பேட்டியில் அந்தக் கூட்டணி குறித்து லோகேஷ் தெரிவித்துள்ளார்.

“இப்போதைக்கு இது பற்றி நான் பதில் சொல்ல முடியாது. இன்னும் பேச்சுவார்த்தை தான் நடந்துவருகிறது. எதுவும் முடிவாகவில்லை. என் அடுத்த படத்தை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.மற்ற விஷயங்களைத் தயாரிப்பு தரப்பு தான் சொல்ல வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது என நினைக்கிறேன்” என்ரார்.

எப்படியும் செப்டம்பர் மாதத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.