செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தீ விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகர்! | நடந்தது என்ன?

தீ விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகர்! | நடந்தது என்ன?

0 minutes read

சென்னையில் உள்ள தியாகராயநகர் பாண்டிபஜார் சாலையில் உள்ள வணிகவளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மூன்று தளங்களைக் கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஜவுளி மற்றும் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் திடீர் தீ பற்றியதால் அங்குள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், கட்டிடத்தின் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் மூலம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, வணிக வளாகத்தில் சிக்கிக் கொண்ட 50-ற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த தீ விபத்தின் போது பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ தனது குடும்பத்துடன் வணிக வளாகத்திற்குள் சிக்கி இருக்கிறார்.

மூன்றாவது தளத்தில் 70 பேர் இருந்ததாகவும், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டதால் ,தாங்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.  

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.