செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

1 minutes read

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர நடிகரான பாரி இளவழகன் கதையின் நாயகனாக – மண்ணின் மைந்தனாக- நடித்திருக்கும் ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், ரோஜா செல்வமணி, சேத்தன், செல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார்.

ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் – நியோ கேசில் கிரியேசன்ஸ் – இரா என்டர்டெயின்மென்ட்- ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, வழங்குகிறது.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் தருணத்தில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக படக்குழு வெளியிட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.