செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

1 minutes read

‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் இடம் பெற்ற’ பட்டாம்பூச்சி’ எனும் பாடலும்,  பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், நாசர், சுதா, சுனில், பவானி ஸ்ரீ, காளி வெங்கட், ஜோர்ஜ் மரியான், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் – ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்-  ஸ்ரீ கரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சூரிய தேவரா- நாக வம்சி- சாய் சௌஜன்யா -ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பட்டாம் பூச்சியாய் ஜெட்டா மாத்தி விட்டானே..’ எனத்தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் எழுத பின்னணி பாடகி சுப்லாஷினி பாடியிருக்கிறார். உரையாடலுடன் தொடங்கும் இந்த பாடலுக்கான காணொளியும்… லிரிக்கல் விடியோவும்.

பாடல் வரிகளும்  அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.