செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

1 minutes read

மலையாள நடிகர் ஜாய் மேத்யூ – வைசாக் ரவி – நேகா சாவ்லா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘அரூபி’ திரைப்படம் – எதிர்வரும் ஜூலை மாதத்தில் முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் அபிலாஷ் வாரியர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரூபி’ திரைப்படத்தில் ஜாய் மேத்யூ, வைசாக் ரவி, நேகா சாவ்லா , சாக்ஷி பாதல்,  சிந்து வர்மா, கிரண் ராஜ், கண்ணன் சாகர் , விஜி பால்,  ஆதித்ய ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை புனர்தம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பி கே ஆர் புரொடக்ஷன் நிறுவனம் வழங்குகிறது.

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இசையமைப்பாளர் எஸ். எஸ். குமரன் – நடிகர்கள் அசோக், சம்பத் ராம், தீபன், கல்வியாளர் சிவராம் செல்லகுமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இந்தத் திரைப்படம் .. இரண்டு விதமான உச்சக்கட்ட காட்சி – இரண்டு விதமான கதை களம் – மூன்று நூற்றாண்டுகள் பழமையான வீடு- ஹாரர் சைக்கலாஜிகல் திரில்லர் ஜேனர் – என பல அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால் இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் திகதி முதல் தமிழ் மற்றும் மலையாள மொழியில் படமாளிகையில் வெளியாகிறது என படக் குழு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளது.

Language Resources

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.