இலண்டனில் நடந்த 7/7 தாக்குதல்களின் 20ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் செய்திக் குறிப்பை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ளார்.
அதில் “நம்மைப் பிரிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும்” என்று மன்னர் அழைப்பு விடுத்துள்ளார்.
தலைநகரின் பொதுப் போக்குவரத்தில் குண்டுகள் வெடித்து 52 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததனர்.
இவ்வாறான அறிவற்ற தீய செயல்களை தாம் கண்டிப்பதாகவும் மன்னர் தெரிவித்தார்.
மேலும், “ஒற்றுமையின் மனப்பான்மைக்கு” மன்னர் அழைப்பு விடுத்தார்.
“அனைத்து மதங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் ஒன்றாக வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை இந்தத் தாக்குதல்கள் காட்டியுள்ளன” என்றும் மன்னர் சார்லஸ் கூறினார்.
இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட ஜூலை 7, 2005 குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், தலைநகரில் இன்று திங்கட்கிழமை (07) நினைவு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.