செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்: இலண்டனில் சுமார் 500 பேர் கைது!

பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்: இலண்டனில் சுமார் 500 பேர் கைது!

1 minutes read

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக மத்திய இலண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டதாக பெருநகர பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பாலஸ்தீன குழுவுக்கு ஆதரவு அளிப்பது அல்லது அதனுடன் தொடர்பு வைத்திருப்பது சட்டவிரோதமானது ஆகும்.

இந்த ஆர்ப்பாட்டங்களை Defend Our Juries அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். Trafalgar Square சுற்றி கிட்டத்தட்ட 1,000 பேர் இதில் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதில் பங்கெடுத்த 492 பேர் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். இவர்களில், 488 பேர் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததற்காகவே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுடைய இளையவரும் 89 வயதுடைய முதியரும் உள்ளடங்குவர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள், மான்செஸ்டரில் யூதர்களுக்கு எதிரான சினகோக் தாக்குதல் (synagogue attack) நடந்ததை அடுத்து ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற அமைச்சர்கள் மற்றும் பொலிஸாரின் வேண்டுகோள்களை மீறியும் நடத்தப்பட்டன.

மான்செஸ்டர் தாக்குதலில் அட்ரியன் டால்பி (Adrian Daulby) மற்றும் மெல்வின் க்ராவிட்ஸ் (Melvin Cravitz) ஆகிய இரண்டு யூதர்கள் கொல்லப்பட்டனர்.

பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் , ஆர்ப்பாட்டக்காரர்கள் “இங்கிலாந்து யூதர்களின் துயரத்தை மதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.

“கைது செய்யப்பட்டவர்களில் சதுக்கத்தை விட்டு வெளியேற விரும்பாத பலரை, சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களைப் பாதுகாப்பாகச் சுமந்து செல்ல குறைந்தபட்சம் ஐந்து அதிகாரிகள் தேவைப்பட்டதாக” பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 492 பேரில், நான்கு பேர் குடிபோதையில் ஒழுங்கீனமாகவும், பொது ஒழுங்கு மீறலுக்காகவும், பொதுத் தாக்குதலுக்காகவும் மற்றும் தொடர்பில்லாத ஒரு வழக்கிற்காக தேடப்பட்டதற்காகவும் கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமை இரவு 10:00 மணி நிலவரப்படி, 297 பேர் பொலிஸ் காவலில் இருந்தனர், ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை பாலஸ்தீன நடவடிக்கையின் மீதான தடையை எதிர்த்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனிய குழந்தைகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More