Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முல்தானி மெட்டி மாஸ்க்

முல்தானி மெட்டியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

பெண்கள் மார்பகங்களை முறையாக பராமரிக்க வேண்டும்

மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் என்பதும், சிறியதாக இருந்தால் குறைவாக சுரக்கும் என்பதும் தவறான கருத்தாகும்.

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது

இன்றைய குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட். பெற்றோர் சொல்லித்தரும் விஷயங்களை கற்பூரம் போல பற்றிக்கொள்கின்றன. அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.

பாத வெடிப்புக்கான தீர்வுகள்

உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, பாதங்களை முறையாக பராமரிக்காதது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவது போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படுகிறது.

குழந்தைகள் கோபப்படுவதற்கான காரணமும்…. பெற்றோர் செய்ய வேண்டியவையும்…

சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை...

புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

இன்றையச் சூழலில் பெண்கள் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு பரந்து விரிந்திருக்கிறது. புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்...

ஆசிரியர்

பெண்கள் விரும்பும் முத்து நகைகள்

வெள்ளை முத்துக்களை மட்டுமல்லாமல் வண்ண முத்துக்களையும் நகைகளாகச் செய்து அணிந்து கொள்ளும் ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிந்து கொள்வதும் பிரபலமாகி வருகின்றது என்றே சொல்லலாம்.

தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என எத்தனையோ வகையான நகைகள் இருந்தாலும் முத்துக்களால் செய்யப்பட்ட நகைகளுக்கு எப்பொழுதுமே தனி மவுசு இருக்கத்தான் செய்கின்றது. பொதுவாக முத்துக்கள் வெள்ளை, சந்தன நிறம் மற்றும் சாம்பல் வண்ணத்தில் இருக்கும். ஆனால் முத்துக்களில் ஊதா, கருப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, ஷாம்பெயின், சாக்லேட், நீலம் மற்றும் லாவென்டர் நிறங்களும் உள்ளன.

நீர்வாழ் உயிரினமான மெல்லுடலி (மொலுஸ்க்)யிலிருந்தே இயற்கை முத்தானது உருவாகின்றது. ஊதா நிற முத்துக்களே அரிய வகையான முத்தாகக் கருதப்படுகின்றது.

முத்துக்களால் செய்த நகைகள் என்று எடுத்துக் கொண்டால் முத்து மூக்குத்தி, முத்து வளையல், முத்து நெக்லஸ், முத்துமாலை, முத்து ஆரம், முத்து கம்மல், முத்து ஜிமிக்கி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

அளவில் பெரியதாக இருக்கும் முத்துக்களை ஒவ்வொன்றாகக் கோர்த்து அதற்கு தங்கத்தினால் செய்த மயில், சந்திரன், லட்சுமி போன்ற டாலர்களில் கற்கள் பதித்து அவற்றின் கீழ்ப்புறத்தில் சிறிய முத்துச்சலங்கைகள் தொங்குவதுபோல் வடிவமைக்கப்பட்டிருப்பது எந்தவித விழாக்களுக்கும் அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கும்.

நடுத்தர அளவிலிருக்கும் முத்துக்கள் அல்லது சிறிய முத்துக்களை இரண்டு மூன்று சரங்களாகக் கோர்த்து அவற்றிற்கு தங்கத்தினால் செய்த பெரிய டாலர்கள் இருப்பதுபோல் இருக்கும் முத்து மாலைகளை அணியும் பொழுது கம்பீரமான தோற்றத்தைத் தருவதாகவே உள்ளன. இந்த முத்துச்சரங்களை இணைத்து இடையில் வரும் தங்க முகப்புகள் சிறிய அளவாக இருந்தால் அதே டிசைனில் டாலரானது பெரிய அளவில் இருப்பது போன்று வருபவை பிளெயின் பட்டுச் சேலைகளுடன் அணியும் பொழுது பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

முத்துக்கள் தங்கக் கம்பிகளில் கோர்க்கப்பட்டு இரண்டு சரங்களாக வர இவற்றின் இடையில் தங்கக் குண்டுகளைக் கோர்த்த மிளகுச் சரமானது வர அவற்றிற்கு பக்கவாட்டில் யானைகள் தும்பிக்கையை தூக்கி இருக்க தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமி டாலரின் கீழே முத்துக்கள் இரண்டு அடுக்குகளாகத் தொங்குவதுபோல் இருக்கும் முத்து ஆரங்களை முத்து ஜிமிக்கிகளுடன் அணிந்தால் அவற்றின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

மிகச்சிறிய முத்துக்களைக் கொத்துக் கொத்தாகக் கோர்த்து செய்யப்படும் மாலைகளுக்கு இரட்டை டாலர்களுடன், அதற்கு ஏற்ற ஜிமிக்கிகளும் அணியும் பொழுது ஒரு மிரட்டலான, அழகான தோற்றத்தைத் தருகின்றன. இதுபோன்ற சிறிய முத்துக்களை கோர்த்து வருபவற்றை லோரியல்கள் என்றும் அழைக்கிறார்கள்.

முத்துக்களோடு தங்கம், பவளம், மரகதம், வெள்ளை மற்றும் சிகப்புக் கற்களும் சேர்த்து மிகவும் அருமையான மாடல்களில் மாலைகள், நெக்லஸ்கள், பதக்கங்கள், காதணிகள், வளையல்கள் போன்றவை செய்யப்படுவது பிரமிப்பான தோற்றத்தைத் தருகின்றன.

முத்துக்களை ஆங்கில எழுத்துக்களில் பதித்து செய்யப்படும் நெக்லஸ்கள் இன்றைய இளைய தலைமுறையினரிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. முத்துக்களால் செய்யப்படும் ஒற்றை, இரட்டை மற்றும் மூன்று அடுக்கு மாடல்களும், முத்தினால் செய்யப்பட்ட சோக்கர் செட்டுகளும், முத்து பிரேஸ்லெட்டுகளும் அப்பப்பா என்று புருவத்தை உயர்த்தும் அளவிற்கு எண்ணற்ற டிசைன்களில் வந்துள்ளன.

தங்கக் குண்டும், முத்தும் குறிப்பிட்ட இடைவெளியில் கோர்க்கப்பட்டு இருக்கும் தங்கச் செயினில் பச்சைக் கல்லை நடுவே பதித்து சுற்றியும் சிறிய வெள்ளைக் கற்கள் பதித்த முகப்பு. அந்த முகப்பில் முதல் சரமும், மூன்றாவது சரமும் தங்கக் குண்டுகளும் முத்துக் குண்டுகளும் கோர்த்து மேலே கூறிய செயினைப் போலவே இருக்க நடுவில் முகப்பிலிருந்து வரும் சரத்தில் முகப்பைப் போன்றே சிறிய அளவிலான கற்கள் பதித்த டிசைன்கள் கோர்க்கப்பட்டு அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதக்கம் முகப்பு டிசைனிலேயே அதே அளவில் இருப்பது புதுமையாகவும், அட்டகாசமாகவும் இருக்கின்றது.

முத்துக்கள் பதித்த ஸ்டைலிஷான பென்டெண்டுகள் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை தனியாக விற்கப்படுகின்றன. அவற்றை நம் விருப்பத்திற்கேற்ப தங்கச் செயினிலோ அல்லது வெள்ளிச் செயினிலோ அணிந்து கொள்வதும் இன்றைய இளம் பெண்களிடையே பிரபலமாகி வருகின்றது.

ஒரே ஒரு பெரிய முத்தை மெல்லிய செயினில், கழுத்தை ஒட்டி அணிந்து கொள்வதும், பேஷனாகவே உள்ளது. முத்துக்களை வைத்து செய்யப்படும் ஃபேஷன் நகைகளுக்கு இளம் பெண்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதுப் பெண்களும் அதிக ஆதரவைத் தருவதோடு அணிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

வெள்ளை முத்துக்களை மட்டுமல்லாமல் வண்ண முத்துக்களையும் நகைகளாகச் செய்து அணிந்து கொள்ளும் ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிந்து கொள்வதும் பிரபலமாகி வருகின்றது என்றே சொல்லலாம்.

நன்றி | மாலை மலர்

இதையும் படிங்க

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

இளமை கொலுவிருக்க.. இதழ்கள் விரியட்டும்..

உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கான காரணங்கள்

பெற்றோர்களிடம் இருந்து எந்தவொரு பழக்கத்தையும் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு எளிதானது. பெற்றோரின் செயல்பாடுகளையும், பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அதன்படியே செயல்படுவதற்கு முயற்சிப்பார்கள்.

குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு 5 கலை சிகிச்சைகள்

ஆக்கப்பூர்வமான விஷயங்களில் குழந்தைகளுக்கு கலை ஆர்வத்தை புகுத்துவதன் மூலம் அவர்களின் தனித்திறன்களையும், புரிந்துகொள்ளும் திறனையும் வளர்த்தெடுக்கலாம். குழந்தைகளை அறிவாற்றலில்...

ஒற்றைக் குழந்தை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை

இன்றைய நவீன சூழலில் ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர் அதிகம். அப்படிப்பட்டவர்கள், தங்கள் குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய...

மாணவர்களுக்கு நல்வழி காட்டுபவர் ஆசிரியர்கள்

ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலகி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளை வெளிகாட்ட வழிவகிக்கின்றனர். நாம்...

தொடர்புச் செய்திகள்

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நவகிரக தோஷங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

ஒருவரின் ஜாதகத்தில் நவக்கிரகங்களின் அமைப்பு சரியாக அமையவில்லை எனில் அவர்களின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. நவகிரக தோஷத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டிய...

இளமை கொலுவிருக்க.. இதழ்கள் விரியட்டும்..

உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

இறந்தவர்கள் கனவில் வருவதற்கு இப்படியும் கூட ஒரு அர்த்தம் உண்டு.

நம்முடன் வாழ்ந்து இந்த பூமியை விட்டு மறைந்த நம் முன்னோர்கள் கனவில் வந்தால் போதும், அப்படியே பயந்து நடுங்கி என்ன பரிகாரம் செய்வது?...

மேலும் பதிவுகள்

ஒற்றைக் குழந்தை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை

இன்றைய நவீன சூழலில் ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர் அதிகம். அப்படிப்பட்டவர்கள், தங்கள் குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய...

மழை காலம், குளிர்காலத்தில் செய்ய வேண்டிய மூச்சு பயிற்சி

குளிர், மழை காலத்திலும் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் எழுந்து விடுங்கள். எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு சிறிய முத்திரை,...

வாரம் தோறும் தவறாமல் பூஜை செய்யும் பெண்களுக்கு!

காலம் எவ்வளவு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், ஆண் பெண் இருவரும் சமமான நிலை என்றாலும், பணம் சம்பாதிப்பதற்காக ஆண் பெண் இருவரும்...

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

உங்களைப் பீடித்து இருக்கும் கொடுமையான வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாக!

வறுமையின் பிடியிலிருந்து எளிதாக நம்மை விடுவிக்க கூடிய சக்தி படைத்தவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். கலியுகத்தில் காக்கும் கடவுளாக விளங்கும் இந்த...

சத்தான சுவையான கம்பு அல்வா

கம்பில் புட்டு, உப்புமா, தோசை என்று பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். இன்று கம்பில் வித்தியாசமான சுவையான அல்வா செய்வது எப்படி என்று...

பிந்திய செய்திகள்

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

தம்புள்ளையை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பிற்பகல் நடைபெற்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபடுவோரை பாகிஸ்தான் விட்டுவைக்காது – இம்ரான் கான் சபதம்

இஸ்லாம் அல்லது நபி (ஸல்) அவர்களின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாயன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈழக்காண்பி ‘Eelamplay’ | ஈழத் திரைப்படங்களை வெளியிட அறிமுகமாகும் ஓடிடி தளம்

ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புக்கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.Eelamplay is a subscription-based...

துயர் பகிர்வு