Thursday, July 29, 2021

இதையும் படிங்க

இப்படியிருக்கவில்லை | கவிதை | லாவண்யா

எது சரி எது தவறென்று எதுவும் சொல்கிறாற்போலில்லை. சரியைத்தவறென்று

மருமகள் | சிறுகதை | கயல்விழி

“சுதன்... சுதன்... எழும்புடா... தேத்தண்ணி வைச்சிருக்கிறன். எழும்பி குடிடா” விடிந்த பின்னரும் சுருண்டு படுத்திருந்த சுதனை அம்மா எழுப்பினார்.

ஞானம் இதழ் குறித்து உரையாடல்

ஞானம் 254 கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வு தொடர்பான அழைப்பிதழ் இதோ. 2021, ஜூலை 17ஆம்...

‘தாமரைச் செல்வி’ எனும் வன்னியின் மூத்த பெண் படைப்பாளி | அகளங்கன்

எமது ஈழத் திருநாட்டின் வடக்கில் அமைந்துள்ள ஐந்து மாவட்டங்களில் யாழ்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களான வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி...

வெள்ளிச்சிறகடிக்கும் வெண்புறாவை வானலையில் பரவச்செய்த கவிஞன்! | முருகபூபதி

காலமும் கணங்களும் :  இன்று  ஜூலை 15   எழுத்தாளர் எம்.எச்.எம்.ஷம்ஸ் பிறந்த தினம்

முருகபூபதி எனும் இலக்கிய ஆளுமையின் வாழ்வும் பணிகளும்! | கிறிஸ்ரி நல்லரெத்தினம்

எழுத்தாளர் முருகபூபதி இன்று தனது எழுபதாவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். படைப்பிலக்கிய செயற்பாடுகளின் வழியாக நன்கு அறியப்பட்ட முருகபூதி, பிற இலக்கியவாதிகளின் வாழ்வையும்...

ஆசிரியர்

துவண்டு விடும் சிறுமி அனிச்சி | சிறுகதை | பொன் குலேந்திரன்

பெண்கள் பலவிதம். கோபம் கர்வம், அசடு, புத்திசாலி, சுயநலம் போன்ற நீண்ட  குண பtட்டியல் அவர்களுக்கு  உண்டு. அதில் தொட்டால் அல்லது உரத்து  பேசினால் துவளும் உள்ள  குணம்  சில பெண்களுக்கு அனிச்சமலரைப் போல்    உண்டு. அந்த குணம்  உள்ள அன்னிச்சியின்  கதை  இது.

பூனகரி ஒருகாலத்தில் ஏரிக்கு அருகில் அல்லி  ராணியின் பூந்தோட்டம் இருந்தது என்று  வரலாறு சொல்கிறது. இப்பிரதேசம் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுக் களமும் ஆகும். அதோடு துறைமுகமமாக  இருந்தது.   அதோடு  வடக்ககையும் தெற்கையும் இணைக்கும்  வழியாக இருந்து   வருகிறது பூநகரி சங்குபிட்டி பாலம் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான மாற்றுப் பாதையாகும்.

பூநகரியில் விளையும் மொட்டைகறுப்பன், பச்சைப்பெருமாள் ஆகிய பாரம்பரிய நெல்லினங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசி உலகின் தலைசிறந்த அரிசி வகைகளுள் ஒன்றாகும். பச்சைபெருமாள் அரிசி நீரிழிவு நோயை கட்டுபடுத்தவல்லது. பூநகரி அரிசியை மக்கள் அதிகம் விரும்புவதால் உள்ளூர் சந்தை முதல் உலக சந்தை வரையில் நல்ல கேள்வி நிலவுகின்றது.

பூநகரியில்  பெண்கள் மாகாணப் பாடசாலை உண்டு. இக் கிராமத்தில் வாழ்ந்த பிரபல எழுத்தாளர் ஆசிரியர்   மணி என்ற மணிவண்ணன் ஒரு இயற்கை விரும்பி. தான் பிறந்த கிராமத்தையும் அதன் இயற்கை  வளத்தையும்  நேசிப்பவர். தமிழ் ஆசிரியரான மணி கவிதை எழுதுபவர்.  தனது கிராமத்தில்  பூக்கும் மலர்களை பற்றி எழுதி பாராட்டு பெற்றவர்.

வானை நோக்கி வளர்கிறது மரம். அது ஒளியின் மீது கொண்ட நாட்டத்தின் அழகான குறியீடு மலர். ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உண்டு, மணம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு மலருக்கும் தனித்தனிக் குணம் உண்டு என்கிறது ஆன்மிகம். இப்பூவுலகெங்கும் மரம், செடி, கொடி, சமுத்திரம், மலை, பறவைகள் மனித இனம், விலங்குகள் என்பன இயற்கையில் பரிணமித்துள்ளன. இவைகள் அனைத்தையும் விட மிகவும் அழகான தோற்றத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளவை தான் மலர்கள் என்பதும் மறுப்பதற்கில்லை.

மரம், செடி, கொடிகளில் பூக்கும் மலர்களின் நிறம், அதன் மருத்துவக் குணம், சுகந்தம், கவர்ச்சியான தோற்றம் என்பன இவ்வுலகில் உள்ளோரை பிரமிக்க வைக்கின்றன என்பது நிதர்சனமாகும். மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் கூட வீட்டுத் தோட்டங்கள், பூஞ்சோலைகள் பூங்காவனங்கள் என்பனவற்றில் கோடான கோடி பூக்கள் தினமும் மலர்வதை அவதானிக்கலாம். இதனாலன்றோ “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று இயற்கையைப் போற்றினர் நமது முன்னோர்கள்.

அதே வேளை “எத்தனை கோடி பூ மலரும்” என்றார் கவிஞர் கண்ணதாசன். அத்தகைய மலர்களின் சிறப்புகளையும், மருத்துவப் பண்புகளையும் விளக்கிக் கூறுவதே இக்கதையின் நோக்கமாகும்.

மலர்கள் நமக்கு இயற்கை நல்கிய கொடை, அவைகளில் தான் எத்தனை எத்தனை வர்ணங்கள், பல்வேறுபட்ட வடிவங்கள், விதம் விதமான நறுமணங்கள், மருத்துவக் குணங்கள் என்று அதன் தாற்பரியங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். கண்ணுக்குக் கவர்ச்சியாகவும், மனதுக்குச் சாந்தியையும், கிளர்ச்சியையும் நல்குவது பூக்கள் தான் என்பது வெள்ளிடை மலை. மலர்கள் புனிதமானவை. இறைவனுக்கு அர்ப்பணிக்க கூடியது.

மணமக்கள் கழுத்தில் மாலையாகப் பொலிவது மலர்கள் தான் என்பதையும் நாம் அறிந்தவை தான். மகரந்தங்களால் இனிக்கும் தேனை வழங்கி வருவதும் மலர்களே. பல்வேறு சிறப்பு மிக்க அத்தகைய மலர்கள் மனித குலத்திற்குப் பிணி நீக்கும் ஔடதமாகவும், முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர் என்றும் அறிய முடிகின்றது. சித்த மருத்துவ நூலைப் புரட்டிப் பார்த்தோமாகில் பல்வேறு வகையான மலர்களின் மருத்துவக் குணங்கள் சிறப்புறக் கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவக் குணம் உண்டு. இன்று கூட தென் இந்தியக் கிராமங்கள் சிலவற்றில் நோய்களுக்குப் பூக்களை மருந்தாகிப் பயன்படுத்தி எளிய முறையில் சிகிச்சை பெறுகின்றனர். இது செலவில்லாமல் சுலப மருத்துவம் என்பது கண்கூடாகும். பலகோடி மலர்கள் உலகில் உள்ளன. இருப்பினும் நமது அனுபவம் மற்றும் பழக்கத்தில் உள்ள மலர்களின் மருத்துவக் குணம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்

நமது உடலுக்குப் பலமும், மனதுக்கு நலமும், வாழ்வுக்கு வளமும் சேர்க்கிற ஆற்றல் மலருக்கு உண்டு. மலர் தூவி இறைவனை வழிபடுங்கள்.

முகர்ந்தால் நொந்து மூடி வாடும் அனிச்சம் பூ. ஆனால் விருந்தினரோ முகம் கோணி நோக்கினாலே வாடி விடுவர் என்ற பொருள் உள்ள  குறளில் அனிச்சம்  மலரை  வள்ளுவர்  குறிப்பிட்டது அனைவரும் அறிந்ததே.

இது போன்ற அனுபவங்கள் பலருக்கும் சில சமயம் நேரிடத்தான் செய்கிறது. அது சரி. அனிச்சம் பூ பற்றி அறிந்திருக்கிறீர்களா? இது பொதுவாக ஒரு களைச் செடியாகக் கருதப்படுகிறது.

அனிச்சம் பூவின் தாவரப் பெயர் ஆங்கிலத்தில் ஸ்கார்லெட் பிம்பெர்னல் (Scarlet Pimpernel) என்று அழைக்கப்படுகின்றது.

மேலை நாடுகளில் அனிச்சம் பூவை வைத்து வானிலை அறிவார்களாம். வானம் மூடினால் மலரும் மூடுமாம். அதனால் “Poor Man’s Barometer” என்றும் அறியப்படுகிறது.

தனது பூநகரி    கிராமத்தில் காட்டில் பூக்கும் மலர்களில் அனிச்சம் மலர் மிகக் குறைவு என்பதை மணிஅறிவார்

திருமணமாகி பல வருடங்களுக்கு   பின் தனக்கும்  துணைவி மல்லிகாவுக்கும்  பிறந்த மகளுக்கு அனிச்சி  என்று  மணி  பெயர்  வைத்தார்

பிறந்த போதில் இருந்தே அனிச்சி   சாந்த முகமும் பயந்த  சுபாவம்  உள்ளவள் . உரத்த சத்தம் போட்டு  யாரும் பேசினால்  அவள் அழுது முகம்  சுருங்கி விடுவாள் . ஒரு நாள் மணிக்கும் மல்லிகாவுக்கும் வட்டில் வாக்குவாதம்   நடந்தது. சத்தம் கெட்டு ஓ வென்று அனிச்சி அழுது விட்டாள். அதன் பின் மணியும் மல்லிகாவும் அனிச்சி   முன் வாக்குவாதம் செய்வதில்லை. இன்னோரு வீதியில் இருவர் சண்டை   போடுவதை கீறி ஓ வென்று   அனிச்சி அழுது விட்டாள்.

மணி வீட்டில் பல மலர் செடிகள்   உண்டு.

“அப்பா உங்களிடம் ஒரு கேள்வி கேட்கட்டுமா “?

“கேள் மகளே”

“எனக்கு ஏன் யாருக்கும் இல்லாத அனிச்சி என்ற புது பெயர் வைத்திருக்கிறீங்கள்?”

“உனக்கு தெரியும் எனக்கு மலர்கள் மேல் ஆசை என்று பொதுவாக ரோஜா, மல்லிகா,  செவ்வந்தி,   அல்லி, தாமரா என்று பொதுவாக பெயர்  வைப்பார்கள் . அனேகருக்கு அனிச்ச மலர் ஒரு மென்மையான தொட்டவுடன் துவளும்   மலர் என்பது தெரியாது. உனக்கு அந்த மலரின் குணம் உண்டு. அதனால் அந்த பெயரை  உனக்கு  வைத்தேன்”

“நன்றி அப்பா எனக்கு விளக்கம் கொடுத்ததுக்கு. இந்த மலர் பூநகரியில் மிக குறைவு அப்பா”

“எனக்கு அது தெரியும். என் தோட்டத்தில் ஒரு அனிச்சம் செடி உண்டு. அனிச்சி நீ பலரால் பாராட்டப்படுவாய் இருந்து பாரேன் உனக்கு என்ன  நடக்க  போகுது என்பதை ” மணி மகளுக்கு சொன்னார்.

பூநகரி கிராமத்தில் உள்ள பாடசாலையில் படித்த மாணவிகளில் பணக்கார பக்கமும் ஏழை பக்கமும் இருந்தது. அனிச்சி ஏழ்மையான பக்கத்தைச் சேர்ந்தவரள். அனிச்சியின் பெற்றோர் தங்கள் வருமானத்திற்காக மலர் செடிகள் வளர்த்து  கோவிலுக்கு  விற்பது  வழக்கம்.

அனிச்சிக்கு பத்து வயது, அவள் ஒவ்வொரு நாளும் மலர் தோட்டத்தில் பெற்றோருக்கு உதவி செய்வாள். அவளுக்கு வாழ்க்கையின் ஆடம்பரங்கள் எதுவும் இல்லை, ஆனால் அவளுக்கு நடந்த சிறிய விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தது.  தனியாக நின்று மலர்களுடன் பேசுவாள்.  குருவிகளுக்கு தானியம்  போடுவாள்.

கிராமத்தின் பண வசதி குறைந்த சமூகத்தை சேர்ந்த பெண் அனிச்சி, அவள். பணக்கார பெண்கள் அவளை விரும்பாததால் வகுப்பில்  மற்றவர்கள்  அதிகம்  பேசவது  குறைவு. ஆனால் உதவி  செய்வதில்  முன்னுக்கு  நிற்பாள்.  மிகவும் கனிவான இதயமுள்ள பெண் அனிச்சி. மற்ற பெண்களைப் போலல்லாமல் அவளிடம்  விலை  உயர்ந்த  காலணிகள் அல்லது புதிய உடைகள் அல்லது  நாகைகள் இல்லை. அவள் வகுப்பில் தனியாக உட்கார்ந்து படிப்பாள், இந்த பெண்கள் அனைவரையும் தன் நண்பர்களாகக் கொண்டிருப்பதைப் பற்றி கனவு காண்பாள். மதிய உணவின் போது அனிச்சி பொதுவாக சாப்பிட வீட்டிற்கு செல்வாள், வகுப்பில் தனியாக சாப்பிடுவதை விட இது நல்லது.  என்று அவள்  முடிவு  எடுத்தாள்.

அவளது ஆசிரியை அவள் மீது மிகவும்அன்பாகவும், கனிவாகவும் இருந்தாள். மற்ற பெண்களை அனிச்சியைப்போல் அமைதியாக இருக்க எப்போதும் ஊக்குவிப்பார், அது ஒருபோதும் நடக்கவில்லை.

அன்று ஆகஸ்ட் 21 ஆம் தேதி அவளது   வகுப்பு ஆசிரியையின்    பிறந்த நாள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் மாணவிகள் ஆசிரியருக்கு ஒரு நல்ல பரிசை கொடுப்பார்கள், அனிச்சி ஒருபோதும் பரிசு  கொடுப்பது இல்லை, காரணம்  அவளிடம்  பணம் இல்லை. அதனால் யாரும் அவளிடம் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

ஒரு பணக்கார மாணவி சுனிதா, மற்ற சிறுமிகளிடமிருந்து பணத்தை சேர்த்தாள். ஆசிரியைக்கு பரிசு மற்றும்  வாழ்த்து அட்டை வாங்க முடிந்தது . அடுத்த நாள் சுனிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பள்ளிக்கு வராததால் சிறுமிகள்  வருத்தப்படுவதை அனிச்சி கவனித்தாள். அனிச்சி மதிய உணவுக்காக வீட்டிற்குச் சென்று, அப்பாவிடம் கொஞ்சம் பூக்களை தோட்டதில்    பறிக்க முடியுமா என்று கேட்டாள். அவள் ஒருபோதும் தன் பெற்றோரிடம் எதையும் கேட்டதில்லை.

பள்ளிக்கூடத்தில் என்ன நடந்தது, அவளின் நண்பிகள் ஆசிரியருக்கு பரிசு கொடுக்க  முடியாமல் எப்படி வருந்துகிறார்கள் என்று தன் தந்தையிடம் சொன்னபோது, அவளுடைய தந்தை அவளுக்கு ஒரு அனிச்ச  மலர் கொத்தை தேர்ந்தெடுத்து  கொடுத்தார். அனிச்சி தனது மதிய உணவை ஒரு அட்டை தயாரிப்பதில் கழித்தாள் அவளுடைய தந்தை அவளது பூக்களை சிவப்பு நாடாவால் போர்த்தினார்.

அனிச்சி மதிய உணவுக்குப் பிறகு தொடங்கிய வகுப்பிற்கு விரைவாக ஓட வேண்டியிருந்தது. அவள் வகுப்பு  கதவைத் தட்டினாள், தாமதமாக வந்ததற்கு ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்டாள். அவள் பூக்களோடும்  மற்றும்  வாழ்த்து அட்டையுடன் ஆசிரியரிடம் நடந்து செல்வதைக் கண்டு வகுப்பு அதிர்ச்சியடைந்தது.   அவள் கையில்  இருந்த புதுமையான  பூக்கள் மிகவும் அழகாக இருந்தன. அவள் அதை ஆசிரியையிடம் கொடுத்தாள். ஆசிரியை  அவளைப் பார்த்து புன்னகைத்து அட்டையைத் திறந்தார். ஆசிரியை அதை சத்தமாக வாசித்தாள், “முழு வகுப்பிலிருந்தும் பிறந்தநாளுக்கு  இந்த குறள் வாழ்த்துக்கள்“ மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து” வகுப்பு முழுவதும்  திருக்குறள் கேட்டு அதிர்ச்சியடைந்தது.

ஆசிரியை, கண்களில் கண்ணீருடன்  அனிச்சிக்கு மிகப் பெரிய அரவணைப்பைக் கொடுத்தார், ஆசிரியை செய்வதைப் பார்த்து முழு வகுப்பும் ஓடிவந்து இறுக்கமாக அனிச்சிக்கு அணைப்பைக் கொடுத்தது. அவர்கள் அனைவரும் அவளுடன் அழுதார்கள், அனிச்சியின் நண்பராக இருப்போம் என்று உறுதியளித்தனர்.

இப்போது ஆறு மாதங்களுக்குப் பிறகு அனிச்சிக்கு வகுப்பில் அதிக நண்பர்கள் உள்ளனர். எல்லா சிறுமிகளும் அவளை நேசிக்கிறார்கள், அவர்கள் அனைவரிடமும் அவள் சிறந்தவள் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அனிச்சி இப்போது தன் பள்ளிக்கு செல்வதை விரும்புகிறாள். அன்பும் கனிவான இதயமும் தான் நம்மை சிறந்த மனிதர்களாக ஆக்குகின்றன.

(யாவும் புனைவு)

பொன் குலேந்திரன்- கனடா

இதையும் படிங்க

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த கவிதா மண்டலம்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த கவிதா மண்டலம் எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான அறிவித்தலை...

‘நலிவுற்ற பெண்களின் குரலாக ஒலித்த ஆளுமை அருண் விஜயராணி’ தாமரைச்செல்வி புகழராம்

நினைவுகளில் வாழும் எழுத்தாளர் அருண் விஜயராணி (அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய இணையவழி...

கவிதை | ஊத்தை | ஜெ.கார்த்திக்

ஊரெங்கும் ஓடியாடி விளையாடிவீதிதோரும் புழுதியில் உருண்டுகிடைத்தாயின பல்வகை ஊத்தைகள்!இடைவெளி காணாச் சதைபோர்த்தியகரிய நிறத்துப் பிறவித் தோல்களுக்குமேலும் மேலும்...

கல்வயல் கலாநிதி முருகையன்

கலாநிதி இ.முருகையன் நாடறிந்த மூத்த கவிஞர், நாடக எழுத்துருப்படைப்பாளி. யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் உள்ள கல்வயல் என்னும் கிராமத்தில் தமிழாசிரியர்...

விடியாபொழுது | சிறுகதை | சன்மது

"இப்போ நம்ம எங்கோ போறோம் விஸ்வா..." பதற்றம் சற்றும் குறையாமல் அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்ட நேத்ரா. "கொஞ்ச...

தொடர்புச் செய்திகள்

விடியாபொழுது | சிறுகதை | சன்மது

"இப்போ நம்ம எங்கோ போறோம் விஸ்வா..." பதற்றம் சற்றும் குறையாமல் அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்ட நேத்ரா. "கொஞ்ச...

நினைவுக்கல் | சிறுகதை | ரேணுகாசன் ஞானசேகரம்

வானம் பார்த்த பூமியென அந்த புனிதக்கல் உறவினரின் வருகையில், அவர்களின் கண்ணீரில் நனைந்திடக்காத்து கிடக்கின்றது. ஒரிரு முறை மட்டும் தீப ஒளி ஏற்றப்பட்டு...

மனக்குமுறல் | சிறுகதை | முல்லை அமுதன்

சொகுசுக்காரில் வந்திறங்கியவள் நக்கலாய்ப் பார்த்தாள். வித்தியா புன்னகைத்தபடி வரவேற்றாள். 'எவ்வளவு?' ஆங்கிலத்திலேயே கேட்டாள். வித்தியாவும் சொன்னாள்.'120 பவுண்ட்'

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மருமகள் | சிறுகதை | கயல்விழி

“சுதன்... சுதன்... எழும்புடா... தேத்தண்ணி வைச்சிருக்கிறன். எழும்பி குடிடா” விடிந்த பின்னரும் சுருண்டு படுத்திருந்த சுதனை அம்மா எழுப்பினார்.

இசைக்கலைஞர் ரவி சங்கர் பற்றி தெரியுமா..

‘ரவீந்தர சங்கர் சௌத்ரி’ என்ற இயற்பெயர் கொண்ட ‘ரவி சங்கர்’ அவர்கள், உலகப் புகழ்பெற்ற மாபெரும் சித்தார் இசைக்கலைஞர் ஆவார். மேற்கத்திய நாடுகளில்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

ஐந்து வங்கிக் கணக்குகளை இயக்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வாய்ப்பு!

நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன் சிக்கல் நிலைமை அதிகமாகக் காணப்படுபவர்களாகவும் உள்ளனர். அத்துடன் சிகிச்சை நிலையங்களிலும் தொற்றாளர் நிரம்பியுள்ளதாக...

இலங்கையில் ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்துவதற்கு தயார்!

தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த தாம் தயாராக உள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம், இலங்கை வர்த்தகச்...

கணவனுக்கு நீண்டஆயுள் -சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம்!

வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 29.07.2021

மேஷம்மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்....

மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்?

மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின்...

துயர் பகிர்வு