செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கூடிக் களிப்புறலாம் வாறீர் | முல்லையின் ஹர்வி

கூடிக் களிப்புறலாம் வாறீர் | முல்லையின் ஹர்வி

0 minutes read

என் நாட்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கப்பட்டாகிற்று
அணு ஆயுதங்கள் எதுவென்று கேட்கத் தோன்றினால் உங்கள் மூளைகளை அலசுங்கள்

அரிசிக்கும் பருப்புக்கும்
அடிபாடு
ஏறும் விலைவாசியை
கண்டித்து
தெருக்களில் கூடல்கள்

பச்சிளம் குழந்தையும்
பாட்டியும் கூவிக் கொள்கிறார்கள்
நீ இருந்தால் அனைத்தும்
செங்கோல் கொண்டிருக்கும் என……

பழய கிளடு ஒன்று விறகுக் கட்டைகளை ஏற்றிய மாட்டு வண்டியில் இருந்து
சிரித்துக் கொண்டிருக்கின்றது
பெற்றோலுக்கும் காஸுக்கும் வரிசையில் காத்திருக்கும் சொகுசு மேதைகளைப் பார்த்து

இம்முறைதான் என் நாட்டில்
புதுவருடம் பிறந்திருக்கின்றது
இனமும் மதமுமற்ற கையேந்தற் பலகைகள்..
கைகோர்த்து கோசமிடும் ஒருமித்த ஒலிகள்..
ஓடி ஒழிந்து கொள்ள யாரும் அஞ்சவில்லை..
தெருக்களிலே வான வேடிக்கை
கூட்டாஞ் சோறோடு,
தூக்கத்தில் விழிக்க எதிரிகளுக்கு இது தான் தகுந்த நேரம்!!!!

கொன்றவன், கொல்லப் பட்டவன் என்றெல்லாம் மறந்தாகிற்று
வாலிபர்களின் சந்ததி பேதமற்ற எழுச்சித் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றது

ஊர் கூடி அனைவருக்கும் சேர்ந்து இங்கே ஆர்ப்பரிக்கின்றனர்
தினமும் இனி புதுவருடம் தான் வாருங்கள் இனி நாம் கூடிக்களிப்புறலாம்

முல்லையின் ஹர்வி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.