21
……………
உலகில் அவரவர் இடம்
அவரவருக்கு
வாழ்த்தலாம் போற்றலாம்
சிந்திக்கலாம்
புறக்கணிக்கலாம்
அது கலையூக்கம்,
காலத்தின்
புகழுக்கு வேரின் நீர்
தனது இடம் போகாது
பிறர் இடம்
நமக்கு வாராது
கலை வீதியில் பட்டுக்கோட்டையின்
இடம் கண்ணதாசனுக்கு போகவில்லை,
யாருக்கும் யாரும்
போட்டியல்ல
தெப்பக்குளத்தில் மிதக்கட்டும்
சிறு தீபங்கள்,
எண்ணெய் இருக்கும் வரை
மகிழ்ந்து எரியட்டும்
அதன் காலங்கள்.
சீனு ராமசாமி