Monday, September 20, 2021

இதையும் படிங்க

‘சி.வி : மலையகத்தின் ஒளிரும் மூர்த்திகரம்’ | 107 ஆவது பிறந்த தின நினைவேந்தலும் நினைவுப்பேருரையும்

மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையின் 107  ஆவது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் செப்டெம்பர் 14  ஆம் திகதி 'நினைவுப் பேருரை'...

அரச இலக்கிய விருது வழங்கும் விழா 2020இல் விருது பெறும் ஈழ எழுத்தாளர்கள்!

அரச இலக்கிய விருது வழங்கும் விழா 2020 இல் நாவல் இலக்கிய பிரிவில் விருது 'உயிர்வாசம்', நாவலாசிரியர் தாமரைச்செல்வி அவர்களுக்குவழங்கப்படவுள்ளது. அதே பிரிவில்  'வலசைப் பறவைகள்', நாவலாசிரியர் சிவ ஆரூரன் அவர்கள் சான்றிதழ்...

படகு மனிதர்களின் ஆத்மாவை புதிய நாவலில் சித்திரித்த படைப்பாளி தாமரைச்செல்விக்கு சாகித்திய விருது! | முருகபூபதி

தாமரைச்செல்வியின்  “ உயிர்வாசம்  “ நாவலுக்கு  இலங்கையில் தேசிய சாகித்திய விருது !  கடந்த அரை நூற்றாண்டு...

தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவலுக்கு இலங்கை அரசின் சாஹித்த மண்டல விருது

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி தாமரைச்செல்வி எழுதிய உயிர்வாசம் நாவலுக்கு இலங்கை அரசின் சாஹித்த மண்டல விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த ஈழப் படைப்பாளி தாமரைச்செல்வியின் ஆறு நாவல்கள் குறித்த நிகழ்வு!

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வியின் சுமைகள் முதல் உயிர்வாசம் வரையிலான ஆறு நாவல்கள் குறித்த விமர்சன அரங்கு ஒன்றை வணக்கம் இலண்டன் இணையத்தளம்...

சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்

அஞ்சலிக்குறிப்பு   “நல்ல  நல்ல நூல்களே நமது சிறந்த நண்பராம் “ எனப்பாடிய  சிறுவர் இலக்கிய கர்த்தா   துரைசிங்கம் விடைபெற்றார் 

ஆசிரியர்

நடுகல் நாவல் விமர்சனம்: நினைவுகளே ஆயுதங்கள்: வெளி ரங்கராஜன்

              
ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டு ஆகின்றது. உலகம் எங்கும் கவனம் பெற்று வரும் இந்த நாவல் குறித்து தொடர்ச்சியாக விமர்சனங்களும் இரசனைக் குறிப்புக்களும் எழுதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஈழ விடுதலைப் போராட்ட பின்னணியில் கிளிநொச்சியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் குறித்த இந்த நாவல் இளையவர்களாலும் மக்களாலும் சிலாகிக்கப்படும் பிரதியாகவும் தனித்துவம் பெறுகின்றது. தமிழ் இலக்கிய மரபுக்கு மிகவும் நெருக்கமான தமிழக எழுத்தாளர் வெளி ரங்கராஜன் எழுதிய இவ் விமர்சனத்தை வணக்கம் லண்டன் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கின்றது. -ஆசிரியர் (இலக்கியச் சாரல்)

தமிழ் ஈழப்போரின் பின்புலத்தை மையமாக வைத்து போராளிகள்,போராட்டத்துக்கு வெளியே இருந்து உறவுகளை இழந்த குடும்பங்கள்,போரில் நேரிடையாக பாதிக்கப்பட்டு இருப்பிடங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து அலைக்கழிக்கப்பட்ட மக்கள் என இம்மூன்று தரப்பு உணர்வுகளையும் கடந்த காலமும், நிகழ்காலமும் கலைத்துப் போடப்பட்ட ஒரு கொலாஜ் பாணியில் முன்னிறுத்தி எதிகாலத்துக்கான உறுதிப் பாடுகளை கட்டமைக்க விழைகிறது இந்த நாவல்.2009ம் ஆண்டு இறுதிகட்டப்போரின் தோல்விகளுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து நேர்மறையானதும், எதிர்மறையானதுமான பல புனைவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் தீபச்செல்வனின் இப்படைப்பு ஒரு இழக்கப்பட்ட காலத்தின் நினைவோட்டங்களின் பின்புலத்தில் நிகழ்கால யதார்த்தங்கள் குறித்த பரிசீலனைகளை முன்வைத்துச் செல்கிறது.

வேறுபட்ட இத்தரப்பு பார்வைகளின் நம்பகத்தன்மைகளை அச்சூழலின் பின்புலத்தில் உள்ளவர்களே தீர்மானமாக கணிக்க முடியும் என்றாலும் ஒரு செறிவான இலக்கியப் படைப்பு தனக்குரிய வகையில் சூழல் யதார்த்தம் குறித்த   அனுமானங்களை முன்வைக்கத் தவறுவதில்லை.அவ்வகையில் இந்த நாவல் போரினால் வாழ்வையும், நினைவுத் தடங்களையும் இழந்த ஒரு சமூகத்தின் கூக்குரலை நிதர்சனமாகப் பதிவு செய்து எஞ்சியுள்ள அடையாளங்கள்  மற்றும் சிதைவுகளின் வழியாக வரலாற்று நினைவுகள் மீட்கப்படும் பல்வேறு சாத்தியங்களை முன்வைக்கிறது.

நடுகல் நாவல்க்கான பட முடிவுகள்"

அந்த முயற்சியில் நடுகற்கள்,புகைப்படங்கள், மரணித்தவர்களின் நினைவிடங்கள் ஆகியவை கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்குமான உறவுநிலைகளை உயிரோட்டமாக மீட்பு செய்தபடி உள்ளன. கல்லறைகள் உடைப்பு, நினைவுச் சின்னங்கள் அழிப்பு,காடுகள் அழிப்பு,இயற்கை அழிப்பு,நிலங்கள் பறிப்பு என இலங்கை ராணுவத்தின் தமிழ் இன வெறுப்பும், வெறியும் எங்கும் காணக் கிடைக்கின்றன. வீடற்ற வாழ்க்கையும்,கூரையற்ற வீடுமாக முகாம்களில் நீளும் வாழ்நிலைகளின் அவலங்கள் நிதர்சனமாக யதார்த்தத்தை பறைசாற்றியபடி உள்ளன. காலமே ஒரு குறியீடாக இழந்த நினைவு, இழந்த வாழ்க்கை,
இழந்த வரலாறு என எஞ்சியவைகளை பற்றிச்சென்றபடி நம்பிக்கைக்கும், நம்பிக்கையின்மைக்கும் இடையே ஊசலாடியபடி உள்ளது.

Image may contain: Veli Rangarajan

குடும்பமும்,சமூகமும் மீளமுடியாது தன்னுடைய நினைவுத் தடங்களை இழந்திருந்தாலும் நடுகற்கள் மீண்டும் மீண்டும் இழப்பின் துயரங்களை கிளர்ந்தெழச் செய்தபடி உள்ளன.

பின்னுரையில் பிரேம் குறிப்பிடுவதுபோல இங்கு நடுகல் என்பது மீண்டும் நிகழக்கூடாத ஆனால் எதிர்காலத்தை நடத்திச்செல்லும் ஒரு அரசியல் குறியீடாக உள்ளது. நினைவுகளே ஆயுதங்கள் ஆக,ஆனால் ஆயுதங்கள் அற்ற, போர்கள் அற்ற மாற்றுப் போராட்டம் முன்நின்றபடி உள்ளது.சுயசரிதைத்தன்மையும்,நிகழ்காலமும்
கலைத்துப் போடப்பட்ட ஒரு தொனி நாவலுக்கு கூடுதலான நம்பகத்தன்மையை அளிப்பதாக உள்ளது.சில சிறுகதையாடல்களின் தொகுப்பாக இதன் அபுனைவுத்தன்மை கூட புனைவின் சாத்தியங்களை அதிகப்படுத்திச் செல்கிறது. இன்றைய பின்நவீன காலகட்டத்தில் புனைவுக்கும், அபுனைவுக்குமான இடைவெளிகள் குறுக்கப்பட்ட நிலையில் நாவல் குறித்த வரையறைகள் மாறியபடி உள்ளன.
இலங்கை ராணுவம் தன்னுடைய போர்க்குற்றங்களுக்காகவும்,மனித உரிமை மீறல்களுக்காகவும் எந்தவிதமான வருத்தமோ, விசாரணையோ இல்லாமல் தமிழ்ப்பகுதிகளில் தொடர்ந்து ஆக்ரமிப்புகளை நிகழ்த்திவரும் நிலையில் தமிழ் இனத்தின் வாழ்வுரிமைக்குரல்கள் உலக அரங்கில் உரத்து ஒலிக்கவேண்டிய தேவை உள்ளது. நினைவு மீட்பு,வரலாறுமீட்பு ஆகிய  பின்புலத்தில் நாவல் அதற்கான ஒரு இலக்கியக் குரலை முன்னெடுக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் உலக அரங்கில் நாவல்  பெற்றுவரும் கவனமும், நாவல் குறித்து எழுப்பப்படும் கேள்விகளும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை.

– வெளிரங்கராஜன். விமர்சகர் தமிழகத்தின் குறிப்பிடக்க எழுத்தாளர் மற்றும் நாடகத்துறை கலைஞர். 

இதையும் படிங்க

அண்ணாவை நினைக்கின்றோம் | கவிக்கிறுக்கன் முத்துமணி

மண்ணாய் கிடந்த மறத்தமிழர் உதிரம்அண்ணா என்ற அடலேறு வந்தபின்னால்பொன்னாய் மின்னியது புனலாய் பொங்கியதுசின்னானும் சேவகனும் சீமைத்துரை...

பிரான்சிஸ் கிருபா | கவித்துவத்தின் தேவதை

மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு மாம்பலத்தில் ஒரு மேன்ஷனில் அஜயன்பாலா தங்கியிருந்தார். அப்போது எனக்கு வசிப்பிடம் பழவந்தாங்கல். நகரத்துக்குப் போகும்போதும் வரும்போதும் பல...

எழுத்தாளர் ஃப்ரான்சிஸ் கிருபா மறைந்தார்! படைப்பாளிகள் இரங்கல்!!

கவிஞரும், எழுத்தாளரும், திரைப்பட பாடலாசிரியருமான ஃபிரான்சிஸ் கிருபா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு கவிஞர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நந்தினி சேவியர் படைப்புகள் | சு. குணேஸ்வரன்

விடியல் பதிப்பகம் நந்தினி சேவியரின் எழுத்துக்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறது. நந்தினி சேவியர் இதுவரை எழுதிய படைப்புக்களில் சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள்,...

ஈழத்தின் இலக்கிய ஆளுமை நந்தினி சேவியர் காலமானார்!

ஈழத்தின் இலக்கிய ஆளுமை நந்தினி சேவியர் காலமாகியுள்ளார். தே. சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் (பி. மே 25, 1949)...

ஞானம் இதழ் பற்றிய கலந்துரையாடலுக்கு அழைப்பு!

ஞானம் கலந்துரையாடல் - 256 அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரம், மாலை 16:45...

தொடர்புச் செய்திகள்

மிச்சேல் பச்லற் அம்மையாரே! கிரிசாந்தி, இசைப்பிரியாக்களுக்கான நீதியை தருவீர்களா? | தீபச்செல்வன்

பெண்களுக்கு இழைக்கப்படுகிற அநீதிகள் ஒரு சமூகத்தின் வேரைத்தான் பாதிக்கின்றது. தாய்மொழியையும் பண்பாட்டையும் மனித சமூகத்திற்கு பரிமாற்றம் செய்கின்ற மகத்துவமான பெண்கள் ஒரு இனத்தின்...

தென்னிந்திய திரைத்துறையினுள் பாடலாசிரியராக கவிஞர் தீபச்செல்வன்

எழுதியவர் :வெற்றி துஷ்யந்தன் இயக்குனர் ரஞ்சித் யோசப்பின் இயக்கத்தில் வெளியான திரைப்படம்...

நூல்களை ஆராத்திக்கும் ஆர்வலனுக்கு அமுதவிழா | கவிஞர் தீபச்செல்வன்

இலக்கிய உலகில் பெயர் என்பது ஒரு அடையாளம். சொந்தப் பெயராகவோ புனைபெயராகவே இருக்கலாம். எழுத்து வழியாக ஒரு எழுத்தாளன் முகவரியைத் தேடுகிறான். தன்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும் ஆசிரியைகள்

ஒத்துழைப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வீடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு என ஆசிரியை லிஸ்சி கூறினார்.

திருப்பதியில் ரூ.2.30 கோடி உண்டியல் வசூல்

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்து தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம்...

ஓய்வுபெற்ற சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன் விபத்தில் பலி

டேனிஷ் முன்னாள் தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன், தனது 37 ஆவது வயதில் சனிக்கிழமை காலமானார்.

மேலும் பதிவுகள்

வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் தபால் சேவைகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் தபால் சேவைகள் இடம்பெறவுள்ளதுடன் தபால் நிலையங்களும் செயல்படவுள்ளன.

ஆஸ்திரேலியாவின் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் வெளியேற முடியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள்

ஆஸ்திரேலியாவின் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியாவுக்கு உதவிய 150க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள்

நிலைமாறுகால நீதி என்ற சொல் இலங்கை அகராதியிலிருந்து நீக்கம்; UNHRCஇற்கு அறிவிப்பு

காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்ட அனைத்தும் அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்டவையாகும். எனவே...

எழுத்தாளர் ஃப்ரான்சிஸ் கிருபா மறைந்தார்! படைப்பாளிகள் இரங்கல்!!

கவிஞரும், எழுத்தாளரும், திரைப்பட பாடலாசிரியருமான ஃபிரான்சிஸ் கிருபா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு கவிஞர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

14 ஆவது ஐ.பி.எல். சீசன் இன்று மீண்டும் ஆரம்பம் ; சென்னை – மும்பை இன்று மோதல்

2021 இந்திய பிரீமியர் லீக் தொடரின் இரண்டாம் பதிப்பு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்புசாம்பியனான மும்பை இந்தியன்ஸும் தோனி...

ஞானம் இதழ் பற்றிய கலந்துரையாடலுக்கு அழைப்பு!

ஞானம் கலந்துரையாடல் - 256 அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரம், மாலை 16:45...

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

துயர் பகிர்வு