அ ழிவை ஏற்படுத்தாமல் …..
அன்பை பெருக்கிட..வருக வருக ….!!!
ஆ க்ரோயத்தை காட்டாமல் …..
ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ….!!!
இ ழப்புகளை ஏற்படுத்தாமல் ….
இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ….!!!
ஈ னச்செயல் புரியாமல் ….
ஈகையை வளர்த்திட ..வருக வருக ….!!!
உ லகை உலுப்பாமல்….
உள்ளம் மகிழ்ந்திட …வருக வருக ….!!!
ஊ னங்களை ஏற்படுத்தாமல் ….
ஊர் செழிக்க ..வருக வருக …..!!!
எ திரிகளை தோற்றுவிக்காமல் ….
எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக….!!!
ஏ மாற்றங்களை ஏற்படுத்தாமல் ….
ஏற்றங்களை தந்திட ..வருக வருக …..!!!
ஐ யத்தை தோற்றுவிக்காமல் ……
ஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ….!!!
ஒ ற்றர் வேலைகள் பார்க்காமல் ….
ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ….!!!
ஓ லமிட மக்களை வைக்காமல் …..
ஓர்மத்தை ஏற்படுத்திட …வருக வருக ….!!!
ஔ டத்தை பாவிக்காமல் …..
ஔ வை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ….வருக வருக …
நன்றி : srk2581| எழுத்து.காம்
