
எத்தனை மணிகள் எங்கு ஒலிப்பினும்
எத்தனை கடவுள் எங்கு இருப்பினும்
மனிதன் இறுதியில் சேரும் இடம் ஒன்றே
இவை சொல்லும் அன்பும் ஒன்றே
எத்தனை மதங்கள் எங்கு இருப்பினும்
இவை எழுதிய தத்துவம் ஒன்றே
மனிதன் இறுதியில் சேரும் இடம் ஒன்றே
இவை சொல்லும் அன்பும் ஒன்றே
எத்தனை நிறமாய் மனிதர் இருப்பினும்
மானிடம் பேசும் மொழி ஒன்றே
மனிதன் இறுதியில் சேரும் இடம் ஒன்றே
இவை சொல்லும் அன்பும் ஒன்றே
எத்தனை சாதிகள் எங்கு இருப்பினும்
எங்குமே மனிதம் இல்லாதிருப்பினும்
மனிதன் இறுதியில் சேரும் இடம் ஒன்றே
இவை சொல்லும் அன்பும் ஒன்றே
இருப்பவன் இல்லாதவன் எங்கு இருப்பினும்
இவன் எடுத்துப் போவது எதுகும் இல்லையே
மனிதன் இறுதியில் சேரும் இடம் ஒன்றே
இவை சொல்லும் அன்பும் ஒன்றே
இறப்பும் பிறப்பும் உண்மை நிலை
இருப்பது என்று எதுகுமில்லை
மனிதன் இறுதியில் சேரும் இடம் ஒன்றே
இவை சொல்லும் அன்பும் ஒன்றே
அரசனும் ஆண்டியும் அடையும் இடம்
அது பறவையும் குயிலும் கூவுமிடம்
அங்கு அணையா சுடர்கள் வாழுமிடம்
ஆயிரம் ஒளிகள் தெரியுமிடம்
மண் உண்ட பின்பும் தீ தின்ற பின்பும்
நதியும் கடலும் சேரும் இடம்
அது நானும் நீயும் போகும் இடம்
அங்கே ஞானச்சூரியன் உதிக்கும் இடம்
அதுவே ஞானம் அதுவே ஒளியாம்
அதுவே தவமாம் அதுவே முடிவாம்
நாம் சேரும் இடம் ஒன்றே
இவை சொல்லும் அன்பும் ஒன்றே.
பா.உதயன்