Thursday, May 26, 2022

இதையும் படிங்க

ப்ரெய்ன் ஃபோக் ( Brain Fog)  நினைவாற்றல் தடுமாற்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

எம்மில் பலரும் கொரோனாத் தொற்று பாதிப்புக்கு பிறகு ஞாபக மறதி அதிகம் ஏற்படுகிறது.  மேலும் வேறு சிலருக்கு நினைவாற்றல் திறனில்...

மஞ்சளின் தனித்துவம்

விரலி மஞ்சளை தீயில் சுட்டு அதன் புகையை மூக்கால் சுவாசிப்பதன்மூலம் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். இந்திய...

கொரோனாவுக்கு பின் நீரிழிவு நோயாளிகள் அதிகரித்திருக்கிறார்களா?

கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு எம்மில் பலரும் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தையும்...

யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்.. மறக்கக்கூடாதவை…

யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம், அதன் பிறகு...

இரவு நேரத்தில் இதை சாப்பிடுவது நல்லதல்ல

சமைத்த உணவை குளிர்ந்த நிலையில் எப்போதும் உண்பது வயிற்றின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குளிர்ந்த உணவுகளானது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுக்கும் மற்றும் இது பல...

மதிய வேளையில் உணவிற்கு மாற்றாக சாலட்

காய்கறி சாலட்டுகள் நல்லது தான். ஆனால் அதை மதிய வேளையில் உணவிற்கு மாற்றாக உண்ணக்கூடாது. மேலும் சாலட்டுகளில் புரோட்டீன் இல்லை. உடலுக்கு போதுமான புரோட்டீன்...

ஆசிரியர்

சைவ உணவுகளின் மகத்துவம்

சைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. பல நோய் தாக்குதல்களை தவிர்த்து விட முடியும் என்று சைவ உணவினை ஆதரித்து இன்று மருத்துவ உலகம் கூறுகின்றது. இது சரியே. ஆனால் சைவ உணவில் இருக்கக்கூடிய சில சத்து குறைபாடுகளை கூடுதல் ஊட்ட மளிப்பின் மூலம் சரி செய்து விட்டால் போதும். சைவ உணவு மனிதனுக்கு அமிர்த உணவு ஆகிவிடும். அந்த குறைபாடுகளின் நிவர்த்தியினைப் பார்ப்போம்.


வைட்டமின் பி 12 சத்து குறைபாடு யாருக்கும் ஏற்படலாம். ஆயினும் இக்குறைபாடு சைவ உணவு முறை கொண்டவர்களிடம் அதிகம் காணப்படுகின்றது. மேலும் வயது கூடும் பொழுது வைட்டமின் பி 12 ஐ உணவுப் பொருளிலிருந்து குடல் உறிந்து எடுத்துக்கொள்ளும் திறன் குறைகின்றது. எனவே மருத்துவர் அறிவுரைப்படி வைட்டமின் பி 12 சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

நரம்பு பிரச்சினை, சோர்வு, சிந்திக்க இயலாமை இவையெல்லாம் பி 12 சத்து குறைபாட்டின் வெளிப்பாடுகள். பி 12 சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு சிவப்பு ரத்த அணுக்கள் குறைபாடு இருக்கும். உடலுக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பதில்லை. சாதாரணமாக அதிகம் காணப்படும் குறைபாட்டினை சத்து மாத்திரை மூலம் எளிதில் சரி செய்து விடலாம். ஆனால் இதனை சரி செய்யாது விட்டால் நரம்புகளை பாதிக்க வல்லது. வெளிறிய தோல், நெஞ்சு படபடப்பு, கண் பார்வை கோளாறு இருந்தாலும் மருத்துவரை அணுகி பி 12 சத்து உள்ளதா என அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

வைட்டமின் டி3: டி3 சத்து கொழுப்பினை கரைக்கும் , கால்சியம் சத்தினை உறிஞ்சும் உந்துதல் சக்தி கொண்ட வைட்டமின். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை ஞாபகத்திறன், சதை பராமரிப்பு முதல் எலும்பு பராமரிப்பு, பாஸ்பரஸ் சக்தியினை எடுத்துக் கொள்ளுதல், பற்கள் ஆரோக்கியம், நரம்பு மண்டல மற்றும் மூளை ஆரோக்கியம் நுரையீரல், இருதய ஆரோக்கியம் என அநேக பலன்களுக்கு அவசியமாகிறது.

இந்த டி சத்து இன்று கூடுதல் அளவு தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. சில சிறிதளவு உணவில் இருந்தும், இள சூரிய வெய்யிலில் காலை, மாலை உடலில் சூரிய ஒளி படும்படி நிற்பதிலும் இருந்து கிடைக்கின்றது. விவி கதிர் பாதிப்பினையும் தவிர்க்க வேண்டும். இதற்கு டி சத்து மாத்திரை (அ) வேறுவித வடிவில் உட்கொள்ள மருத்துவர் பரிந்துரைப்பார்.

* ஒமேகா 3: இதனை பல சைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
* கர்ப்ப காலத்திலோ, சிறு வயதிலோ அயோடின் குறைபாடு அதிகம் ஏற்பட்டால் மாற்ற முடியாத மூளைச் செயல்பாடு திறன்களை குறைக்கும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அயோடின் குறைபாடு தைராய்டு ஹார்மோன் குறைபாட்டினை ஏற்படுத்தும்.
* அதிக சக்தியின்மை, வறண்ட சருமம், கை, கால் களில் குறுகுறுப்பு, மறதி, மனச்சோர்வு, எடை குறைதல் போன்ற பாதிப்புகள் தைராய்டு குறைபாட்டால் ஏற்படுபவை.

சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு அயோடின் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் கூடுதல் என்பதால் அவர்களுக்கு பால், பால்சார்ந்த உணவுகள் மற்றும் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு இவைகள் அறிவுறுத்தப்படுகின்றன. இரும்பு சத்து: இரும்புச்சத்துதான் டி.என்.ஏ. மற்றும் சிகப்பு ரத்த அணுக்களுக்கு பொறுப்பாகின்றது. ஆக்ஸிஜனை உடல் முழுவதும் ரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்கின்றது. உடலுக்கு தேவையான சக்தியையும் அளிக்கின்றது.

குறைந்த அளவு இரும்புச்சத்து உடலில் இருந்தால் சோர்வு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும், பெண்கள், கர்ப்பினி பெண்கள் இவர்களுக்கு கூடுதலாக இரும்புச்சத்து தேவைப்படுகின்றது. சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் பீன்ஸ், பட்டாணி, உலர் பழங்கள், கொட்டைகள், விதைகள், இரும்புச்சத்து சேர்க்கப்பட்ட உணவுகள், தானிய உணவுகள் இவைகளை நன்கு உண்ண வேண்டும்.

இரும்பு பாத்திரங்களில் சமைப்பது நல்லது. உணவோடு சேர்த்து காபி, டீ, பருகக் கூடாது. வைட்டமின் சி சத்து தேவையெனில் மருத்துவ ஆலோசனையோடு பெற்றுக்கொள்ள வேண்டும். கவனம்: மிக அதிக இரும்புச்சத்து ஆபத்தானது. வலிப்பு, உறுப்புகள் பாதிப்பு, கோமா என கொண்டு செல்லும். எனவே எதனையும் மருத்துவ ஆலோசனை இன்றி செய்யக்கூடாது. 

இதையும் படிங்க

தோள்பட்டை கிண்ண மூட்டை சீராக்கும் நவீன சத்திரசிகிச்சை

குத்து சண்டை விளையாட்டின்போது வீரர்களின் எதிர்பாராத தாக்குதலின் காரணமாக அல்லது விபத்தின் காரணமாகவோ எம்மில் சிலருக்கு அவர்களின் தோள்பட்டை மூட்டு பாரிய அளவில்...

இன்று உலக தைராய்டு தினம்

தைராய்டு நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 25-ந் தேதி ‘உலக தைராய்டு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

நுண்ணறிவு , அறிவுத்திறன் மிளிர மச்சாசனம்

விரிப்பில் நேராகப் படுக்கவும். கைகளின் உதவியால் உச்சந்தலையை தரையில் படும்படி வைத்து கைகளை கால் முட்டி மீது வைக்கவும்.

தியான வகைகளில் இதுவும் ஒன்று

தியானம் அனைத்துமே நம்மை அமைதிப்படுத்த உதவுகிறது, இறுதியான இலக்கு இதுவல்ல. நேர்மறை நிலைகளைக் கட்டமைப்பதற்கான உண்மையான திட்டத்தை உருவாக்குவதற்கு முன்னர், நம்முடைய மனஅழுத்தத்தை...

மாம்பழம் இப்படி தான் சாப்பிட வேண்டும் இல்லை துன்பமெ

ஒரு கோடைக்கால பழம். இப்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி, உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. இரவு நேரத்தில் லேசான உணவை சாப்பிட...

தூங்கும் போது குறட்டை சத்தம்…

எப்போதாவது குறட்டை விட்டால் பிரச்சினை இல்லை, குறட்டை சத்தம் அந்த அறையில், சில சமயங்களில் அந்த வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் செய்துவிடும்.

தொடர்புச் செய்திகள்

புதிய பல அறிகுறிகளுடன் கொரோனாவின் ஆறு வகைகள்!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில், 6 வகையைக் கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள், அவற்றின் மூலம் ஏற்படும் அறிகுறிகளை தனித்தனியாக வகைப்படுத்தி உள்ளனர். லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ்களில் 6 வகையான தனித்துவமான...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் சமந்தா பவர்

USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் விதம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்...

12 நாட்களில் 100 கோடி வசூல்‘டான்’ திரைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’.  இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

ஜனாதிபதியும் பிரதமரும் பல்வேறு துறைகள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் இன்று தனித்தனியாக ஈடுபட்டிருந்தனர். தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட அதிகாரிகள் ஜனாதிபதியை...

மேலும் பதிவுகள்

மாவீரனாக மாறும் சிவகார்த்திகேயன்

மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான டான் திரைப்படம்...

ஜோ பைடன் ஆசியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று தென் கொரியாவுக்கு பயணமானார். தொடர்ந்து அவர் இன்று ஜப்பானுக்குப் பயணிக்கவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் பைடன் ஆசியாவுக்கு...

சுக்கிரன் மாற்றம் பன்னிரு ராசியின் நிலை

சுக்கிரன் குரு ஆளும் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் 2022 மே 23 ஆம் திகதி இரவு 8.26 மணிக்கு மேஷ ராசிக்குள் நுழைகிறார்.

9 செவ்வாய் செய்து பாருங்கள் வாரம் நீங்கள் வேண்டியது நிச்சயம் நடக்கும்

வழிபாட்டு முறையை மேற்கொள்ள நமக்கு செம்பருத்தி பூவின் இலைகள் தேவை.  27 செம்பருத்திப் பூ இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை...

போராட்டத்தை கலைக்க பொலிஸார் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். ‘கோட்டா – ரணில் சதி...

பா.ரஞ்சித்தின் புதிய படம்

'அட்டகத்தி', 'மெட்ராஸ்' திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'கபாலி', 'காலா' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் டைரக்டர் பா.இரஞ்சித்....

பிந்திய செய்திகள்

தங்க நகைகள் அணிவதன் அறிவியல் உண்மைகள்

பெண்களின் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தங்க நகை அணிவது தீர்வாகிறது. தங்க நகைகளை பயன்படுத்துவதில் உள்ள அறிவியல் நன்மைகளை நாம் இங்கே...

நாக தோஷம் நீங்க….

பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பெண்ணாக கைபேசியில் உரையாடி பணம் மோசடி செய்த ஆண் கைது

கைபேசி செயலி (Mobile Apps) பயன்படுத்தி பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கிழக்கைச் 26...

இளையராஜா வீட்டில் கிரிக்கெட் விளையாடிய ரஜினி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி, இளையராஜா வீட்டிற்கு சென்று கிரிக்கேட் விளையாடி உள்ள சம்பவம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கணவர் மீது மோசடி புகார் கொடுத்த பிரபல நடிகை

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான சைத்ரா ஹள்ளி கேரியின் போலி கையெழுத்துபோட்டு வங்கியில் நகை கடன் மோசடி. கன்னட...

3 ஆவது ஐ. சி. சி. மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குப்பற்றும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2025இல் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள 3ஆவது ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் (ICCWC) தொடரில் பங்குப்பற்றும்...

துயர் பகிர்வு